YouTurn

ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !

ம.பியில் அடி பம்பு மூலம் சாராயம் விற்றதை திராவிட மாடல் எனப் பதிவிட்ட பாஜகவின் நாராயணன் திருப்பதி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

'ஆனா இது புதுசா இருக்குண்ணே'.. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி.  அட! இது தான் திராவிட மாடல்!



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்டத்தில் அடி பம்பு மூலம் தண்ணீருக்கு பதிலாக சாராயத்தை விற்ற சம்பவம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. நிலத்தில் 7 அடிக்கு கீழ் அமைக்கப்பட்ட ட்ரம்புகளில் இருந்து பம்பு மூலம் எடுத்து சட்ட விரோதமாக சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.



இரு கிராமங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தெரிய வந்ததையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் வீடுகளில் இருந்தும், நிலத்திற்கு அடியில் 8 ட்ரம்புகளில் இருந்தும் 1,200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.



பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலத்திற்கு அடியில் ட்ரம்களில் சாராயத்தை சேகரித்து வைத்து அடி பம்பு மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்ததை போலீசார் கண்டறிந்த சம்பவம் குறித்து தமிழில் முன்னணி செய்திகள் பலவற்றிலும் செய்திகள் வெளியாகின.

ஒன் இந்தியா தமிழ் இணையதளம் , " 'ஆனா இது புதுசா இருக்குண்ணே'.. அடிபம்பை அடிச்சா தண்ணீருக்கு பதில் சாராயம்.. போலீஸார் அதிர்ச்சி " எனும் தலைப்பில் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.



Twitter link 

ஒன் இந்தியா தமிழ் ட்விட்டரில் பதிவிட்ட பதிவிலும் மத்தியப்பிரதேசம் என டக் செய்து இருக்கிறார்கள். ஆனால், இந்த பதிவை பகிர்ந்த தமிழக பாஜகவின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி " இது தான் திராவிட மாடல்! " எனப் பதிவிட்டு இருக்கிறார்.

பாஜகவின் சிவராஜ் சிங் செளகான் முதல்வராக இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சட்ட விரோத மதுபானத்தை தமிழ்நாடு என தவறாகப் பரப்பி இருக்கிறார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க