YouTurn

ஒரு கழிவறை ரூ.90 லட்சமா ?.. கரூர் எம்.பி ஜோதிமணி பற்றிப் பரவும் வதந்தி !

ஒரு கழிவறை ரூ.90 லட்சமா ?.. கரூர் எம்.பி ஜோதிமணி பற்றிப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இதுதான் ஒன்றிய Toilet அஹ... நீங்க வேணும்னா 3 லட்சத்துல வீடு கட்டலாம்! நம்ம கரூர் ஜோதிமணி அக்கா MP நிதியில் வெறும் ரூ.90.0000 (90 லட்சம் ரூபாயில்) கட்டப்பட்ட கழிவறை. அடேங்கப்பா, நல்ல சாதனை.

விரிவான விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.90 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த பொதுக்கழிவறையைக் கட்டியுள்ளதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



Archive link 



Archive link

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் புகைப்படம் குறித்து எம்.பி ஜோதிமணியின் ட்விட்டர் பக்கத்தில் தேடுகையில், " மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்னும் சிறிது நேரத்தில் திறப்புவிழா செய்யப்பட இருக்கும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சில " என ஜூன் 2-ம் தேதி கட்டிடங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்



Archive link 

பொதுக்கழிவறை புகைப்படத்தில், " கரூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செல்வி S.ஜோதிமணி எம்பி அவர்கள் நிதியிலிருந்து கட்டப்பட்டது. இடம் : சின்னதாராபுரம், மதிப்பீடு : ரூ.9.00 இலட்சம் " என்று எழுதப்பட்டு உள்ளது.



ஜூலை 2-ம் தேதி கரூர் மாவட்டத்தில் முடிவுற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட போது பேசிய எம்.பி ஜோதிமணி, " கரூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு வகுப்பறைகள், நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள், சின்னதாராபுரம் பரமத்தி நொய்யல் அரசுப் பள்ளியில் கழிவறை" என முடிவுற்ற திட்டங்களை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.



ஆகவே, புகைப்படத்தில் இருப்பது சின்னதாராபுரம் பரமத்தி நொய்யல் அரசுப் பள்ளியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிவறையாகும்.

முடிவு : 

நம் தேடலில், கரூர் எம்.பி ஜோதிமணி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டிய பொதுக்கழிவறை ரூ.90 லட்சம் எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. அது ரூ.90 லட்சம் அல்ல , ரூ.9 லட்சம் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க