YouTurn

ம.பியில் பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவும் வதந்தி !

ம.பியில் பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பசுமாட்டை பதம் பார்த்த மத்திய பிரதேச பாஜக இளைஞரணி தலைவர்.பசுவின் கதறலை கேட்டு ஊர் மக்கள் விரட்டி பிடித்து போலிஸில் ஒப்படைப்பு.



Archive link 

விரிவான விளக்கம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவர் பசு மாட்டை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.





உண்மை என்ன?

இப்புகைப்படத்தைச் சற்று உற்று கவனித்துப் பார்த்தால், இப்புகைப்படத்தில் உள்ள நபர்கள் இந்தியர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும். அத்துடன் புகைப்படத்தில் கீழே வலது பக்கத்தில் குறிப்பிட்ட வலைதளமான www.Kampucheathyme.com என்பது கம்மோடியா நாட்டில் உள்ள ஒரு தினசரி செய்தித்தாளின் பெயராகும்.



பின்னர், மத்தியப் பிரதேச பாஜக இளைஞரணித் தலைவர் என்று உள்ளதே தவிர, அந்த தலைவரின் பெயர், உள்ளிட்ட எவ்விதமான தகவலும் கொடுக்கவில்லை.



சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நிகழ்ந்ததா எனத் தேடுகையில, " மத்தியப்பிரதேசம் குவாலியர் பகுதியில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிசிடிவி காட்சி வைரல் ஆனதால் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருவதாக " டைம்ஸ் நவ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. மேலும், ம.பியில் பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

முடிவு : 

நம் தேடலில், மத்தியப் பிரதேச உள்ள பாஜக இளைஞரணி தலைவர் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. அது கம்போடியா நாட்டின் செய்தியில் வெளியான புகைப்படம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க