யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த 15ம் தேதி (செப்) முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா-வின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில் அரசு அளித்த ரூ.1000 வாங்கியவர்கள் அதனைக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் மது அருந்துவதாகப் புகைப்படம் ஒன்றினை பாஜக ஆதரவாளர் உமா கார்கி முதற்கொண்டு வலதுசாரிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
தமிழ்நாடு அரசு மகளிருக்கு அளித்த உரிமைத் தொகை திட்டத்துடன் சேர்த்துப் பரப்பப்படும் பெண்கள் மது அருந்தும் புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில் அது 2015ம் ஆண்டு முதலே சமூக தளங்களில் பரவி வருவதைக் காண முடிந்தது.
Archive link
‘Sri’ என்னும் டிவிட்டர் பக்கத்தில் 2015, மே மாதம் இப்படம் தெலங்கானா எனப் பதிவிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இதே படத்தினை 2015, ஏப்ரல் 30ம் தேதி வட இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் பக்கம் ஒன்று பதிவிட்டுள்ளதையும் காண நேர்ந்தது.
மேற்கொண்டு அப்படத்தினை பற்றித் தேடியதில் 2015, ஏப்ரல் 28ம் தேதி கிஷோர் என்பவரது பின்டிரஸ்ட் (pinterest) பக்கத்திலும் அப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் எந்த ஊர் என எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.

பெண்கள் மது அருந்தும் படமானது 2015ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளங்களில் உள்ளது. இம்மாதம் (செப்டம்பர்) வழங்கப்பட்ட மகளிர் உரிமை தொகையையும், அப்படத்தினை ஒப்பிட்டு தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு :
நம் தேடலில், தமிழ்நாட்டில் அளிக்கப்படும் மகளிர் உரிமை தொகையைப் பெற்றுக் கொண்டு பெண்கள் மது அருந்துவதாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2015ம் ஆண்டு முதலே பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பரப்பப்பட்டு வருவதைக் காண முடிகிறது.

Jai Golden telangana
తాగండి కడుపునిన్డా తాగండి
యాదా రాజా తదా ప్రజా pic.twitter.com/WZQ41lJUmC
— Sri (@srithh) May 2, 2015