யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தன்னுடைய இளம்வயதில் யோகா பயிற்சி செய்யும் காட்சியென 8.24 நிமிட வீடியோ ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. தமிழ் மட்டுமின்றி இந்தி மொழியிலும் ட்விட்டர், யூடியூப் சேனல் உள்ளிட்டவையில் இவ்வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
வைரலாகும் வீடியோவை Invid tool மூலம் கீஃப்ரேம்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், வீடியோவில் இருப்பது " ஐயங்கார் யோகா " முறையை உருவாக்கிய யோகா ஆசிரியர் பிகேஎஸ் ஐயங்கார் என அறிய முடிந்தது.

2009-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டாம் மார்ட்டின் யூடியூப் சேனலில் " Krishnamacharya & B.K.S. Iyengar in 1938 with Yoga Sutras " எனும் தலைப்பில் தற்போது வைரலாகும் அதே 8 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது.
1930-களில் பிகேஎஸ் ஐயங்கார் யோகா பயிற்சியை செய்து காட்டும் வின்டேஜ் வீடியோக்கள் பல யூடியூப் சேனல்கள் பலவற்றில் வெளியாகி இருக்கின்றன. iymv.org எனும் இணையதளத்தில், 1938-ம் ஆண்டு பிகேஎஸ் ஐயங்கார் செய்த யோகா பயிற்சியின் டிவிடி வீடியோவின் கவரில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் காட்சி புகைப்படமாக இடம்பெற்று இருக்கிறது.

முடிவு :
நம் தேடலில், 1938-ம் ஆண்டு யோகா ஆசிரியர் பிகேஎஸ் ஐயங்கார் யோகா பயிற்சியை செய்து காட்டும் வீடியோவை பிரதமர் மோடி இளம்வயதில் யோகா பயிற்சி செய்யும் அரிய வீடியோ என வதந்தியைப் பரப்பி வருகிறார்கள். இந்த வீடியோ எடுக்கப்பட்டது 1938-ம் ஆண்டு, பிரதமர் மோடி பிறந்தது 1950-ம் ஆண்டு என அறிய முடிகிறது.
एक दुर्लभ अद्भुत विडीयो नरेन्द्र मोदी जी का...। आपलोग भी आश्चर्यचकित रह जाएंगे।
उच्च स्तर की योग साधना🌷🌷#नमो_नमः 🙏🙏 @narendramodi @BJP4India @BJP4CGState @BJYM pic.twitter.com/KIiirwtP5o
— Ghanshyam Prasad Sahu (@Ghanshyam_BJYM) November 23, 2020