
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

விரிவான விளக்கம்
Facebook link | archive link
Facebook link | archive link
பிரதமர் மோடி கோட்சேவை வணங்குவதாகக் கூறி வதந்திகள் பரவுவது முதல்முறை அல்ல. இப்படி பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது கோட்சே அல்ல, சாவர்க்கர். இது குறித்து தேடுகையில், 2018 டிசம்பர் 30-ம் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அறைக்கு சென்றதாக புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
Among those imprisoned at Cellular Jail was the great Veer Savarkar. I visited the cell where the indomitable Veer Savarkar was lodged. Rigorous imprisonment did not dampen Veer Savarkar’s spirits and he continued to speak and write about a free India from jail too. pic.twitter.com/dbsyzuVUjA
— Narendra Modi (@narendramodi) December 30, 2018
Twitter link | archive link
2018-ல் பிரதமர் அந்தமான் தீவிற்கு சென்று சாவர்க்கர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல், பிஎம்ஓ இந்தியா யூடியூப் சேனலில் பிரதமர் மோடி அந்தமானின் செல்லுலார் சிறைக்கு சென்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.

2018-ல் அந்தமான் செல்லுலார் சிறைக்கு சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி அங்கு சாவர்க்கரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கு முன்பாக, பிரதமர் மோடி சாவர்க்கரின் சிலைக்கு முன்னால் வணங்கும் புகைப்படமும் கோட்சே உடையது என தவறாக பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : மோடி காந்தியை கொன்ற கோட்சேக்கு மாலை அணிவித்து வணங்கினாரா ?
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி காந்தியை வணங்கிவிட்டு, அவரைக் கொன்ற கோட்சேவையும் கொன்றதாக பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது சாவர்க்கர் என அறிய முடிகிறது.