YouTurn

டிரம்ப் பேசும் போது ‘மோடி… மோடி’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் பொய்!

 டிரம்ப் பேசும் போது ‘மோடி… மோடி’ எனக் கோஷமிட்டதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்க அரசியலுடன் தொடர்புடைய ராபர்ட் கென்னடியின் மற்றொரு பெயரான ‘Bobby… Bobby…’ எனக் கோஷமிட்டதை ’மோடி, மோடி’ எனத் திரித்துப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

அந்த சத்தம். டிரம்ப் பேசும்போது "மோடி- மோடி" என்ற கோஷம்


image.png


X link

விரிவான விளக்கம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு பேசுகையில் அங்கிருந்த மக்கள் ’மோடி… மோடி…’ எனக் கோஷமிட்டதாக வீடியோ ஒன்று மோடி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1854342495058215363


’அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்க அவர் உதவுவார்’ எனச் சொன்னதும் அங்கிருந்த மக்கள் ’மோடி மோடி’ எனக் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது. 


https://x.com/i/web/status/1854386323450466478


உண்மை என்ன?


தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டிரம்ப் பேசிய முழுமையான வீடியோ ’Fox News’ என்ற ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் உள்ளது. அதில் பரவக் கூடிய பகுதி 19வது நிமிடம் 45வது வினாடியில் இடம் பெற்றுள்ளது. 



டிரம்ப் பேசுகையில் ‘Robert F Kennedy Junior’ என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ‘அவர் அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவுவார்’ எனச் சொல்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் ராபர்ட் கென்னடியின் மற்றொரு பெயரான ‘Bobby… Bobby…’ எனக் கோஷமிட்டுள்ளனர். இதற்குப் பிறகு டிரம்ப் பேசுகையில் பாபி என்ற பெயரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்.


ராபர்ட் குறித்து டிரம்ப் பேசிய பகுதி ‘FOX 9 Minneapolis-St. Paul’ என்ற யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பிலேயே, ‘Trump says Robert Kennedy Jr. will make America healthy again' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த ராபர்ட் எஃப். கென்னடியின் மகன் இந்த ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர். இவரைப் பற்றி டிரம்ப் பேசியதின் சிறு பகுதியை மட்டும் மோடியுடன் தொடர்புப்படுத்திப் பரப்புகின்றனர்.



டிரம்ப் பேசும் போது அமெரிக்க அரசியலுடன் தொடர்புடைய ராபர்ட் கென்னடியின் மற்றொரு பெயரான ‘Bobby… Bobby…’ எனக் கோஷமிட்டதை ’மோடி, மோடி’ எனத் திரித்துப் பரப்புகின்றனர். 


முடிவு: 


டிரம்ப் பேசும் போது அங்கிருந்தவர்கள் ’மோடி… மோடி’ என கோஷம் எழுப்பவில்லை. ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் என்பவரைக் குறிப்பிடும் வகையில்  ‘Bobby… Bobby…’ என்றுதான் கோஷம் எழுப்பியுள்ளனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க