யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இருமுடி கட்டிக்கொண்டு தரிசனம் செய்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவினை 'ஐராவதம் மீடியா - DKV' என்ற யூடியூப் பக்கமும் “சபரிமலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் தரிசனம்” என 2022, டிசம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளது.
உண்மை என்ன ?
நரேந்திர மோடி சபரிமலைக்குச் சென்றது குறித்து அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தேடினோம். அப்படி எந்தவொரு பதிவும் இல்லை.
மோடி சபரிமலைக்குச் சென்றதாக பேஸ்புக் பக்கத்தில் பரப்பப்படும் வீடியோவின் வலது பக்க மேல் ஓரத்தில் ‘M7 news’ என இருப்பதினை காண முடிந்தது. இதனைக் கொண்டு M7 news என்ற யூடியூப் பக்கத்தில் தேடினோம்.

Video link
அப்பக்கத்தில் 2021, ஏப்ரல் 11ம் தேதி கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சபரிமலைக்கு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அது குறித்து இணையத்தில் தேடினோம்.

கேரளா ஆளுநர் இருமுடி கட்டிக்கொண்டு 18 படி ஏறும் வீடியோவை 'தி இந்து' இணையதளத்தில் 2021, ஏப்ரல் மாதம் பதிவிட்டுள்ளது. பரவக்கூடிய வீடியோவில் இப்பகுதியும் இடம் பெற்றுள்ளது.

Archive link
விகடன் இணையதளத்திலும் 2021, ஏப்ரல் 12ம் தேதி “சபரிமலை: இருமுடிகட்டுடன் ஐயப்ப தரிசனம் செய்த கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
2021, ஏப்ரல் மாதம் 10ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 11ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://twitter.com/KeralaGovernor/status/1381284606507290626?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1381284606507290626%7Ctwgr%5E5cc1944a943a56b0f557288f61b0f9f2ab2ea10d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.deccanherald.com%2Fnational%2Fsouth%2Fkerala-governor-arif-khan-offers-prayers-at-sabarimala-shrine-973334.html
Archive link
இந்நிலையில், கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது இளைய மகன் கபீர் ஆரிஃப்புடன் 2021, ஏப்ரல் 11ம் தேதி மாலை பம்பா கணபதி கோயிலிலிருந்து இருமுடி கட்டிக்கொண்டு ஐயப்பன் கோயிலுக்குச் சென்றுள்ளார். இது குறித்து அன்றைய தேதியில் கேரளா கவர்னர் டிவிட்டர் பக்கத்திலும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடி சபரிமலையில் தரிசனம் செய்ததாகப் பரவும் வீடியோவில் இருப்பது மோடி அல்ல. அது கேரளா ஆளுநர் ஆரிஃப் முகமது கான் என்பதை அறிய முடிகிறது. அவர் 2021,ஏப்ரல் 11ம் தேதி தனது மகனுடன் சபரிமலைக்குச் சென்றுள்ளார்.