YouTurn

உருமாறிய கொரோனா செய்திக்கு மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா ?

உருமாறிய கொரோனா செய்திக்கு மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் படத்தை சன் நியூஸ் வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சன் நியூஸ்ல ஒரு முரட்டு மீம் கிரியேட்டரை வேலைக்கி எடுத்துருக்காய்ங்க. அவன் ஒவ்வொரு செய்தியையும் மீமா தான் பாக்கறான்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

சன் நியூஸ் நிறுவனத்தின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்படும் நியூஸ் கார்டுகளில் இடம்பெறக்கூடிய புகைப்படங்கள் கிண்டல் செய்யும் விதத்திலும், மீம் வடிவிலும் இருப்பதாக அதிக அளவில் பகிர்வதையும், கமெண்ட் செய்வதையும் பார்த்து இருக்கிறோம்.

இந்நிலையில், " உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை " உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும். கொரோனா 3-வது அலையை விரைவாக தடுக்க வேண்டும் !. 6 மாநில முதலமைச்சர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு " எனும் செய்திக்கு சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டு உள்ளதாக ஓர் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Twitter link | Archive link 





உண்மை என்ன ?

2021 ஜூலை 16-ம் தேதி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு குறித்து அதன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், பிரதமர் மோடியின் தற்போதைய புகைப்படத்தை வைத்து வெளியிட்ட நியூஸ் கார்டே இடம்பெற்று இருக்கிறது.



Facebook link | Archive link 

வைரல் செய்யப்படும் சன் நியூஸ் கார்டை பார்க்கையில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்றாக தெரிகிறது. பிரதமர் மோடியின் புகைப்படம் இருக்கும் பகுதியில் எடிட் செய்யப்பட்டது தெரிவதை காணலாம்.



மேலும் படிக்க : போலி செய்தி பற்றி பேசிய அண்ணாமலை… அதை நியூஸ் 7 கார்டில் எடிட் செய்து பரப்பும் ஆதரவாளர்கள் !

முன்னணி செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளில் போலியான செய்திகளை அல்லது கட்சி தலைவர்கள் பேசியதை எடிட் செய்து பரப்புவதை நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

மேலும் படிக்க : ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு இயக்குனர் தங்கர் பச்சான் ஆதரவு தெரிவித்தாரா ?

முடிவு :

நம் தேடலில், சன் நியூஸ் நிறுவனம் உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானவை என வெளியிட்ட செய்தியில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு வெளியிட்டதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க