யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
தம்பி எப்படி இருக்கீங்க.. பெட்ரோல் விலை எல்லாம் ஏரிப்போச்சுங்க.. சரி சரி உக்காரு

விரிவான விளக்கம்
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் மக்களுடன் உரையாற்றிய போது, ஒருவரிடம் எப்படி இருக்கீங்க என கேட்ட கேள்விக்கு பெட்ரோல் விலை உயர்ந்ததாக கூறுகிறார். அதற்கு உடனே உட்காரு, உட்காரு என மோடி கூறுவதாக அமைந்து இருக்கும் 13 நொடிகள் கொண்ட வீடியோ சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி நீண்ட தாடி, முடியுடன் தனது தோற்றதையே மாற்றி இருந்தார். இந்நிலையில், வைரல் செய்யப்படும் வீடியோவில் இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றம். தற்போதைய பெட்ரோல் விலை உயர்வை வைத்து பிரதமர் மோடியை விமர்சிக்க பழைய வீடியோவை எடிட் செய்து வைரல் செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் வீடியோ குறித்து தேடுகையில், " 2018-ம் ஆண்டு மே 2-ம் தேதி ABP MAJHA எனும் மராத்தி செய்தியில் பயனார்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுவதாக " வைரலாகும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.
வீடியோவில் 28-வது நொடியில், அந்த பயனாளரிடம் எப்படி இருக்கீங்க என மோடி பேசும் போது ராம் ராம், பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஏதும் இடம்பெறவில்லை. அவரின் குரலும், பதிலும் வேறாக இருக்கிறது.
2018-ல் பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பயனடைந்த மகாராஷ்டிரா நாசிக் பகுதியைச் சேர்ந்த பயனாளரிடம் மராத்தி மொழியில் பிரதமர் பேசியதாகவும், ஹரி கனோர் தாகூர் உள்பட பல பயனாளர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றியதாக மராத்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது
முடிவு :
நம் தேடலில், பிரதமர் மோடி பொதுமக்கள் உடன் உரையாற்றிய போது, தம்பி எப்படி இருக்கீங்க.. பெட்ரோல் விலை எல்லாம் ஏரிப்போச்சுங்க.. சரி சரி உக்காரு என கூறியதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
😂😂😂 pic.twitter.com/eyUJyS6uFl
— Second Show (@SecondShowTamil) February 8, 2021