YouTurn

பிரதமர் மோடி பூமியின் இறுதி நம்பிக்கை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா ?

பிரதமர் மோடி பூமியின் இறுதி நம்பிக்கை என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உலகின் மிகவும் பிரியமான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் எனவும் பூமியின் இறுதி நம்பிக்கை எனவும் பிரதம மந்திரி நரேந்திரமோடி அவர்களுக்கு புகழாரம் அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கருத்து



Facebook link 

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பிறகு நேற்று இந்தியா திரும்பினார். இந்நிலையில், பிரதமர் மோடியை உலகின் சக்திவாய்ந்த தலைவர் என்றும், பூமியின் இறுதி நம்பிக்கை என அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டதாக அந்த செய்தித்தாளின் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

தி நியூயார்க்டைம்ஸ் நாளிதழ் பக்கத்தில் 2021 செப்டம்பர் 26-ம் தேதியன்று பிரதமர் மோடி குறித்த செய்தி இடம்பெறவில்லை. மாறாக, வேறொரு செய்தியே வெளியாகி இருக்கிறது.



மேலும், வைரல் செய்யப்படும் பக்கத்தில் செப்டம்பர் மாதம் ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை உடன் இருப்பதை பார்க்கலாம். அதேபோல், மோடி கையெழுத்திடும் புகைப்படத்திற்கு கீழே, " அவரது மேன்மை, மோடிஜி நம் நாட்டை ஆசீர்வதிக்க வெற்று ஏ4 தாளில் கையெழுத்திடுகிறார் " என்ற வாக்கியம் இடம்பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க :  நியூயார்க் டைம்ஸ் பிரதமர் மோடி அழுவதாக முதலைப் படத்தை வெளியிடவில்லை !

இதற்கு முன்பாகவும், தி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளின் முகப்பு பக்கத்தில் இந்திய பிரதமரின் அழுகை என முதலைக் கண்ணீர் வடிக்கும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியதாக எடிட் செய்யப்பட்ட பக்கம் வைரலானது.

முடிவு : 

நம் தேடலில், உலகின் மிகவும் பிரியமான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் என்றும், பூமியின் இறுதி நம்பிக்கை என்றும் பிரதமர் மோடியை புகழ்ந்து தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக பரப்பப்படும் செய்தித்தாள் பக்கம் எடிட் செய்யப்பட்ட போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க