
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
லடாக் யூனியன் பிரதேத்தில் உள்ள லே ராணுவ மருத்துவமனையில் காயமடைந்த ராணுவ வீரர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்திய அளவில் சர்ச்சையாகின. தற்போது பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தில் காயமடைந்தவராக இருக்கும் நபர் பாஜகவின் எம்எல்ஏ வேட்பாளரும் என்றும்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
உண்மை என்ன ?

பிஜேபியின் ஹரிநகர் எம்எல்ஏ வேட்பாளரும், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான தாஜிந்தர் பால் சிங் உடைய ட்விட்டர் பக்கத்தையும், மோடி பேசிக் கொண்டிருக்கும் ராணுவ வீரரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு உள்ளார்கள். இதை வைத்து எப்படி ஒரே நபர் எனக் கூறுகிறார்கள் என புரியவில்லை. பெரும்பாலான சீக்கியர்கள் தாடியும், தலையில் டர்பனும் அணிந்து இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகமே. படத்தில் இருக்கும் வீரர் மாஸ்க் அணிந்து இருக்கிறார். அவரின் முகம் கூட சரியாகத் தெரியவில்லை.
. @RahulGandhi Ji whn I compared your office Barrier with your brilliant mind he feel offended. Can u tell why ? pic.twitter.com/81LiUcpxG5
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) July 5, 2020
Twitter link | archive link
இப்படி பரவும் தவறான ஒப்பீடுக்கு தாஜிந்தர் பால் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்து உள்ளார். பரவி வரும் ஸ்க்ரீன்ஷார்ட் படங்களை பகிர்ந்தும் , தவறான பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் உள்ளார்.
Shame on you. Every sikh wear kada, Kada is Daat of Guru Gobind Singh ji and it's compulsory for Every Sikh to wear. You guys are Exposing yourself only and showing your anti national face to India https://t.co/02KwhFYxaQ
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) July 5, 2020
Twitter link | archive link
இதையடுத்து, தாஜிந்தர் பால் சிங் எண்ணிற்கு யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு கேட்ட போது, " அது நான் இல்லை. அது வதந்தியே " என பதில் அளித்து உள்ளார்.
மேலும் படிக்க : பிரதமர் மோடி பார்வையிட்டது போலியான மருத்துவமனையா ?
இதற்கு முன்பாக, பிரதமர் மோடியின் போட்டோஷூட்டுக்காக கான்ஃபரன்ஸ் ஹாலை மருத்துவமனை போல் பொய்யாக மாற்றியுள்ளதாக தவறான செய்திகள் இந்திய அளவில் வைரலாகி இருந்தன. அதன் தொடர்ச்சியாக, மருத்துவனையில் இருப்பவர்களை பாஜகவின் ஆட்கள் என தவறான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
(குறிப்பு: மருத்துவமனையில் இருப்பவர்கள் யாருக்கும் காயங்கள் ஏதுமில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் ராணுவ தளபதி பார்வையிட வந்த போது தங்களின் காயங்களை வீரர்கள் காண்பிப்பதை காணலாம்).
முடிவு:
நமது தேடலில், பிரதமர் மோடி பார்வையிட சென்ற லே ராணுவ மருத்துவமனையில் பிஜேபியின் எம்எல்ஏ வேட்பாளர் தாஜிந்தர் பால் சிங் இருந்ததாகக் கூறுவது தவறான தகவல் என அறிய முடிகிறது.
