YouTurn

மோடி அடுத்த லீ குவான் யூ என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா ?

மோடி அடுத்த லீ குவான் யூ என சிங்கப்பூர் பத்திரிகை செய்தி வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நவம்பர் 8, 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தக் காலக்கட்டத்தில் மோடியின் பணமதிப்பிலக்கம் பற்றிய ஓர் கட்டுரை “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் வெளியாகியது. அக்கட்டுரையில் கூறியதாவது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற...

பரவிய செய்தி

சிங்கப்பூர் தேசத்தை எப்படி லீ குவான் யூ உருவாக்கினாரோ அதேபோல் இந்தியாவை மோடி உருவாக்குவார். எனவே, மோடி இந்தியாவின் லீ குவான் யூ என்று சிங்கப்பூர் நாளிதழில் வெளிவந்துள்ளது.

விரிவான விளக்கம்

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நவம்பர் 8, 2016-ல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தக் காலக்கட்டத்தில் மோடியின் பணமதிப்பிலக்கம் பற்றிய ஓர் கட்டுரை “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் வெளியாகியது.


அக்கட்டுரையில் கூறியதாவது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சி தகவலானது பிரதமர் மோடி அவர்களால் நவம்பர் 8-ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. மோடியின் இந்த அறிவிப்பானது மக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் மாற்றப்பட்டு உர்ஜீத் படேல் பொறுப்பேற்ற காலக்கட்டத்தில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.


மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், நவம்பர் 30-ம் தேதிக்குள் நிலைமை சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர். அரசியல் நோக்கமின்றி நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்லும் பிரதமர் மோடி அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை அனைவரும் செலுத்த வேண்டும் என்று அரசை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும், பிரதமரின் செயல்திட்டங்கள் சிங்கப்பூர் அரசின் தலைவர் லீ குவான் யூ-விற்கு இணையாக உள்ளது. தேசத்தை உருவாக்க தற்போது பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கையால், இந்தியாவில் புதிய லீ குவான் யூ பிறந்துள்ளார் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


இவ்வாறு, “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் சென்ற ஆண்டு வெளியான கட்டுரையில் பிரதமர் மோடி பற்றிக் கூறப்பட்டதை சிங்கப்பூர் நாட்டின் நாளிதழில் வெளியாகியது என்று தவறானச் செய்தியாக சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

சுருக்கமாக

மோடியின் அதிரடி நடவடிக்கையால் இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்கிறது. ஆகையால், மோடி இந்தியாவின் லீ குவான் யூ என்று “ தி எகோனாமிக் டைம்ஸ் “ பத்திரிகையில் நவம்பர் 10, 2016-ம் ஆண்டு வெளியான செய்தியாகும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க