YouTurn

டைம் இதழ் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு அட்டைப் படம் வெளியிட்டதா ?

டைம் இதழ் மோடியையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு அட்டைப் படம் வெளியிட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

பிரபல பத்திரிகையான டைம் இதழின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், ஹிட்லரையும் இணைத்து " The Return of  History. How modi shattered india's dreams " எனும் வாசகத்துடன் அட்டைப் படத்தை வெளியிட்டதாக இப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 

டைம் பத்திரிகையின் இணையதளத்தில் உள்ள பெட்டகத்தில் 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் எந்தவொரு அட்டைப் படமும் வெளியாகவில்லை.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலின் போது, " India's Divider in chief " எனும் வாசகத்துடன் கூடிய அட்டைப் படம் ஒன்றை டைம் ட்விட்டரில் பதிவிட்டு இருந்துள்ளது.



Twitter link 

2022 பிப்ரவரி 26-ம் தேதி உக்ரைனைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் பட்ரிக் முல்டேர் என்பவர், டைம் இதழில் ரஷ்ய அதிபர் புதினையும், ஹிட்லரையும் இணைத்து எப்படி அட்டைப் படத்தை வெளியிட்டேன் என எடிட் செய்ததை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link 

டைம் இதழில் புதின் மற்றும் ஹிட்லர் படத்தை வைத்து எடிட் செய்தது போன்று பிரதமர் மோடி மற்றும் ஹிட்லர் படத்தை வைத்து எடிட் செய்து இந்தியாவில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், டைம் பத்திரிகையில் பிரதமர் நரேந்திர மோடியும், ஹிட்லர் படமும் இணைக்கப்பட்டு அட்டைப் படம் வெளியாகி உள்ளதாக பரவும் படம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க