YouTurn

துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம் என பாஜக நபர் பதிவிட்டாரா ?

துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம் என பாஜக நபர் பதிவிட்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம். குவியும் பாராட்டுக்கள் !



Archive link 

விரிவான விளக்கம்

" துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம். குவியும் பாராட்டுக்கள்" என தமிழக பாஜகவைச் சேர்ந்த அன்பு செல்வனா என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாக இந்த ஸ்க்ரீன்சார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று (மே 26-ம் தேதி) பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில், இந்த ஸ்க்ரீன்சார்ட் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு இருக்கிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் பதிவு குறித்து தேடுகையில், தமிழக பாஜகவைச் சேர்ந்த அன்பு செல்வனா என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் " துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட முதல்வரின் தனி விமானம். குவியும் பாராட்டுக்கள் " என்றே மார்ச் 25-ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.



Archive link 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற போது தமிழக பாஜகவினர் இப்படியொரு பதிவை பரப்பிக் கொண்டிருந்தனர். அந்த பதிவில், முதல்வரின் என்ற இடத்தில் பிரதமரின் என மாற்றி எடிட் செய்து தற்போது வைரல் செய்து வருகிறார்கள்.



மேலும் படிக்க : குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கவில்லையா ?

இதற்கு முன்பாக, ஜப்பானில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மதிக்கவில்லை என தவறாக வீடியோ பரவியதையும் பதிவிட்டு இருந்தோம்

முடிவு : 

நம் தேடலில், துபாயில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமரின் தனி விமானம், குவியும் பாராட்டுக்கள் என தமிழக பாஜகவைச் சேர்ந்தவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாக பரவும் ஸ்க்ரீன்சார்ட் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க