YouTurn

சீக்கியர்களை ராணுவத்தில் இருந்து நீக்குவது குறித்து பாஜக அமைச்சரவை கூட்டத்தில் பேசியதாக வதந்தி !

சீக்கியர்களை ராணுவத்தில் இருந்து நீக்குவது குறித்து பாஜக அமைச்சரவை கூட்டத்தில் பேசியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு குறித்த மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக பரவும் வீடியோ.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஜனவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி காரில் பயணிக்கும் போது போராட்டக்காரர்களால் 20 நிமிடங்களில் பாலத்தில் காரிலேயே காத்திருந்து பின்னர் விமான நிலையம் திரும்பி சென்றார். பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடிக்கு இப்படியொரு நிலை என பாஜகவினர் நாடு முழுவதும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியை திரும்பி செல்ல வைத்த சீக்கியர்களை ராணுவத்தில் இருந்து நீக்குவது குறித்து ஜனவரி 6-ம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவல் ஆகியோர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ இந்திய அளவில் வைரலாகத் தொடங்கியது.

உண்மை என்ன ?

பிரதமர் மோடியின் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்க வேண்டும் எனப் பேசப்பட்டதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது.



கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது பாதுகாப்பு குறித்து நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் வீடியோ. அதில், ஆடியோ ஒன்றை இணைத்து உள்ளனர்.



Twitter link  

இந்திய ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்குவது குறித்து பாஜக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக எடிட் செய்யப்பட்ட வீடியோ பரவியதால் அரசு தரப்பிற்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, PIB தரப்பில் போலியான வீடியோ பரவுவதாக ட்வீட் செய்துள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், ஜனவரி 6-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு குறித்த மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக பரவும் வீடியோ போலியானது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க