YouTurn

மோடி பிறந்தநாளன்று பாஜக வெளியிட்ட சாதனை வீடியோவில் லாஸ் ஏஞ்சலஸ் காட்சி !

மோடி பிறந்தநாளன்று பாஜக வெளியிட்ட சாதனை வீடியோவில் லாஸ் ஏஞ்சலஸ் காட்சி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளன்று பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டும், பாராட்டியும் " 2.42 நிமிட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.



ஒவ்வொரு தலைப்பின் கீழ் மோடி அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை என பட்டியலிட்டுக் கொண்டே போகும் போது 2.24 வது நிமிடத்தில் "21-ம் நூற்றாண்டை வழிநடத்தும் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை மாற்றியமைத்ததற்காக" பாராட்டும் தலைப்பில் ஒரு நகர கட்டிடங்கள் மின்னும் காட்சி இடம்பெற்றது.

அந்த நகர கட்டிடங்கள் எங்கு எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடவில்லை. எனினும், பிரதமர் மோடியின் திட்டங்கள் மற்றும் சாதனை வீடியோவில் இடம்பெற்றதால் இந்தியாவைச் சேர்ந்தது என்றே பார்ப்பவர்களை நினைக்கத் தோன்றும். ஆனால், அந்த காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் எடுக்கப்பட்டது.



2011-ம் ஆண்டில் "The Angels" A los Angeles Timelapse by Matthew Givot " எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் 3.55வது நிமிடத்தில் இருந்து இடம்பெற்ற கட்டிடங்களின் காட்சி பாஜக வெளியிட்ட வீடியோவில் இருக்கும் கட்டிடங்களுடன் ஒத்துப் போவதை பார்க்க முடிகிறது.





இதில், ஆச்சரியம் என்னவென்றால் 2017-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த skyled எனும் பல்பு நிறுவனம் இதே வீடியோ காட்சியை விளம்பரத்தில் பயன்படுத்தி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளன்று பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் இடம்பெற்ற நகர கட்டிடங்களின் காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க