YouTurn

முத்துராமலிங்கத் தேவரால் சர்ச்சை ஏற்படும் என டி.ஆர்.பி.ராஜா கூறியதாகப் போலிச் செய்தி !

முத்துராமலிங்கத் தேவரால் சர்ச்சை ஏற்படும் என டி.ஆர்.பி.ராஜா கூறியதாகப் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

முத்துராமலிங்கத்தேவரால் சர்ச்சை ஏற்படும்... முத்துராமலிங்கத்தேவர் சிலையை வைத்தால் பிற சமூகங்களில் சர்ச்சை ஏற்படும். வேலுநாச்சியார் தனிஆளாக அந்நியர்களை எதிர்த்து போரிட்டார். எனவே வேலுநாச்சியார் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்தோம்- திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

மன்னார்குடி எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராகவும் உள்ள டி.ஆர்.பி.ராஜா, முத்துராமலிங்கத் தேவர் சிலையை வைத்தால் சர்ச்சை ஏற்படும் என்பதால் வேலுநாச்சியார் சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல முடிவு செய்தோம் எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, முத்துராமலிங்கத் தேவர் மற்றும் வேலுநாச்சியார் குறித்து கருத்து தெரிவித்தாரா எனத் தேடுகையில், அவரின் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களோ அல்லது செய்தியோ வெளியாகவில்லை.

நியூஸ் 7 தமிழ் உடைய முகநூல் பக்கத்தில் உள்ள நியூஸ் கார்டுகளை ஆராய்கையில், டி.ஆர்.பி.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக ஜனவரி 19-ம் தேதி எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.



பரப்பப்படும் நியூஸ் கார்டில் நியூஸ் 7 தமிழ் உடைய வாட்டர்மார்க் கூட இடம்பெறவில்லை. நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டில் போலியான செய்தியை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெளிவாய் அறிய முடிகிறது.

இதுகுறித்து, நியூஸ் 7 தமிழ் உடைய இணையதளப் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசுகையில், இதை நாங்கள் வெளியிடவில்லை. போலியானது " எனத் தெரிவித்து இருந்தனர்.

மேலும் படிக்க : பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவும் போலிச் செய்திகள் !

இதேபோல், பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அமைச்சர் சக்கரபாணி, " மக்களுக்கு நன்றியே இல்லை " எனக் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், முத்துராமலிங்கத்தேவரால் சர்ச்சை ஏற்படும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாக பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க