YouTurn

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் - எம்எல்ஏ தனியரசு

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் - எம்எல்ஏ தனியரசு

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பொழுது காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு பேசத் துவங்கினார். அப்போழுது, மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே ஒரு பாட்டில் வாங்குவது கூட மிக கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட்...

பரவிய செய்தி

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் - எம்.எல்.ஏ தனியரசு.



 

விரிவான விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் பொழுது காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு பேசத் துவங்கினார். அப்போழுது, மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே ஒரு பாட்டில் வாங்குவது கூட மிக கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது போன்று மாலை நேரத்தில் ஒரு பாட்டில் வாங்க நெடுநேரம் ஆகிறது. கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடைகள் இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆகையால், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.



மத்திய அரசு மாட்டிறைச்சி விவகாரத்தில் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எம்.எல்.ஏ தனியரசு தமிழக அரசின் முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மது பழக்கம் அதிகரித்து வருவதை எதிர்த்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என ஒருபுறம் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில், எம்.எல்.ஏ தனியரசு உடைய நடமாடும் டாஸ்மாக் கடைகள் கோரிக்கை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தனியரசு உடைய கோரிக்கைக்கு சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுகின்றன.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…