YouTurn

மு.க.ஸ்டாலின் நிதியுதவிக்காக மட்டும் மத்திய அரசு என அழைத்தாரா ?

மு.க.ஸ்டாலின் நிதியுதவிக்காக மட்டும் மத்திய அரசு என அழைத்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அது என்ன பணம் வாங்க மட்டும் மத்திய அரசு !! பழி போடும்போது மட்டும் ஒன்றிய அரசு ??



Facebook link 

விரிவான விளக்கம்

மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என அழைத்தார். இதற்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு என அழைப்பதில் தவறில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆகையால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் ஒன்றிய அரசு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்பதற்கு பதிலாக மத்திய அரசு எனக் கூறியுள்ளதாகவும், நிதியுதவிக்காக மட்டும் மத்திய அரசு எனக் கூறுவதாக செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Archive link 



உண்மை என்ன ? 



Twitter link  

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து தேடுகையில், பிரதமர் மோடிக்கு நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து கடிதம் எழுதிய செய்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில், " ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் " என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.



முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என அழைத்த போதும் சில ஊடக செய்திகளில் வழக்கம் போல் மத்திய அரசு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், தற்போது முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ஆங்கிலத்தில் Union Government எனக் குறிப்பிட்டதை செய்தி நிறுவனங்கள் மத்திய அரசு என்று எழுதி உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவிக்காக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசிற்கு பதிலாக மத்திய அரசு எனக் கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. செய்தி நிறுவனமே மத்திய அரசு எனக் குறிப்பிட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க