YouTurn

முதல்வரின் கொளத்தூர் தொகுதி அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கியதாகப் பழைய படத்தை பரப்பும் அதிமுக, பாஜகவினர்

முதல்வரின் கொளத்தூர் தொகுதி அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கியதாகப் பழைய படத்தை பரப்பும் அதிமுக, பாஜகவினர்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை. மக்களை ஏமாற்றுவது என்றுதான் முடியுமோ. இதில் சென்னை 2.0 ஒரு வெத்து விளம்பரம் சுத்துது.

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில் அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள பகுதியில் மழையின் காரணமாகத் தண்ணீர் தேங்கியுள்ளதாக ஒரு புகைப்படத்தை தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.



Archive link 



Twitter Link

உண்மை என்ன ?

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கடந்த 4 நாட்களாக மிக அதிகமாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் மழை நீர் வடிகால் திட்டம் 95% முடிவடைந்ததாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும், வடசென்னை போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கியுள்ளது எனப் பரவிய புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில் அந்தப் புகைப்படம் 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டது எனத் தெரியவருகிறது.



Twitter Link

ஜி.எம். கார்த்திகைச்செல்வம் என்பவர் 2021 நவம்பர் 28ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது வைரலான புகைப்படத்தை 2021ம் ஆண்டுச் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Twitter Link

Stalin’s Kolathur shines light on failed urban planning எனும் தலைப்பில் 2021 நவம்பர் 27ம் தேதி DT Next செய்தித்தளம் கொளத்தூர் தொகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது குறித்துச் செய்தி வெளியிட்டிருந்தது.



மேலும், 2022 ஜூன் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. தற்போதைய அலுவலகத்தின் தோற்றம் வேறாக இருப்பதை வீடியோவில் காணலாம்.



இந்நிலையில், சென்னையில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் கொளத்தூர் மற்றும் திரு.வி.க தொகுதிகளில் மட்டுமே கடந்த 48 மணி நேரமாகத் தண்ணீர் தேங்கியுள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்ததாக Only two constituencies faced water stagnation in Chennai: Minister எனும் தலைப்பில் 2022 நவம்பர் 4ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.



முடிவு :

நம் தேடலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது எனப் பரவி வரும் புகைப்படம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் எடுக்கப்பட்டது எனத் தெரிய வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க