YouTurn

முதலமைச்சரை வரவேற்க நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதா?

முதலமைச்சரை வரவேற்க நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் வரவேற்பு அளிக்க டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது.

பரவிய செய்தி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் நியூயார்கிலுள்ள டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில்.

X link

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டுக்கு தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக அமெரிக்கா, நியூயார்க் நகரில் அமைந்துள்ள ‘டைம்ஸ் ஸ்கொயர்’ கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று திமுகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக்கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறியமுடிந்தது. 

இதே புகைப்படம் ‘The Clio’ என்ற தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் குறித்த எந்த விளம்பரமும் இடம்பெறவில்லை. ஆனால், அருகில் உள்ள மற்ற கட்டிடங்களில் உள்ள விளம்பரங்கள் ஒத்துப்போகிறது. மேலும் கட்டிடத்தின் மேல் பகுதியில், ‘2013’ என்றுள்ளது. எனவே இது தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.


இப்புகைப்படம் ‘Nantucket Preservation Trust’ என்ற தளத்திலும் 2015ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் பதிவிடப்பட்டுள்ளது.  அதிலும் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி எந்த விளம்பரமும் இல்லை. இவற்றிலிருந்து மு.க.ஸ்டாலின் பற்றி நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிசெய்ய முடிகிறது.

இருப்பினும்  சரியாக இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதைக் கண்டறிய முடியவில்லை. தகவல் கிடைக்கும்பட்சத்தில் கூடுதல் தகவலாக இக்கட்டுரையில் சேர்ப்போம். 

முடிவு: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் வரவேற்பு அளிக்க டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க