YouTurn

மு.க.ஸ்டாலின் திருமணத்தில் காமராஜர் கலந்து கொண்டாரா ? இல்லையா ?

மு.க.ஸ்டாலின் திருமணத்தில் காமராஜர் கலந்து கொண்டாரா ? இல்லையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெருந்தலைவர் காமராஜர் இறந்தது அக்டோபர் 2, 1975 மு.க ஸ்டாலினுக்கு திருமணம் ஆனது அக்டோபர் 20, 1975.

விரிவான விளக்கம்

ஜூலை 15-ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் பிறந்தநாள் சார்பாக அவர் குறித்த வரலாறுகள், நினைவுகள் அனைத்தும் ஊடகங்கள், சமுக வலைதளங்களில் பதிவாகி  வருகின்றது. இந்நிலையில், தற்போதைய திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்காவதி ஆகியோரின் திருமணத்திற்கு  ஐயா காமராஜரை மணமேடைக்கே காரில் அழைத்து வந்தவர் அப்போதைய தலைவர் கருணாநிதி என்று " கலைஞரும் காமராஜரும் "  தலைப்பில் திமுக கட்சியின் சார்பில் வெளியான தகவலுக்கு கீழே பெருந்தலைவர் காமராஜர் இறந்தது 1975 அக்டோபர் 2-ம் தேதி, மு.க ஸ்டாலினுக்கு திருமணம் ஆனது அக்டோபர் 20, 1975  என இரு ஸ்க்ரீன்ஷார்ட்களை இணைத்து உள்ளனர்.



Facebook link | archive link 

கிஷோர் கே சுவாமி எனும் முகநூல் பக்கத்தில் வெளியான இப்பதிவு பல முகநூல் பக்கங்கள், குழுக்களில் பகிர்ந்து வைரலாகி வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?  



ஐயா காமராஜர் இறந்தது 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியே, ஆனால் மு.க.ஸ்டாலின் திருமணம் நடைபெற்றது அக்டோபர் 20-ம் தேதி அல்ல, 1975 ஆகஸ்ட் 20-ம் தேதி. ஆங்கிலத்தில் மு.க.ஸ்டாலின் திருமண நாள் எனத் தேடிய போது 1975-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி என விக்கிப்பீடியா உள்ளிட்ட தகவல் கிடைக்கின்றன. அதைப் பார்த்து குழப்பம் அடைந்து இப்படி பரப்பி வருகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.



ஆங்கிலத்திற்கு மாறாக தமிழில் தேடினால், கடந்த ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்காவதி ஆகியோரின் திருமணநாள் என ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியான செய்திகள் கிடைத்தன. கருணாநிதி உயிருடன் இருந்த போது 2016-ல் 41-வது திருமணநாளில் கோபாலபுரத்தில் கருணாநிதியிடம் ஸ்டாலின் ஆசீர் பெற்றார் என்றும், அவர்களின் திருமண பத்திரிகையும் என வெளியாகி இருந்தன. மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்காவதி திருமண பத்திரிக்கை சில ஆண்டுகளாகவே வைரலாகி இருந்தன.



2020 ஜூலை 15--ம் தேதி மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், " பெருந்தலைவர் காமராஜர் மறைவதற்கு 40 நாட்களுக்கு முன் நடைபெற்ற என்னுடைய திருமண விழாவில் உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், அவர் வருவதற்கென்றே அமைக்கப்பட்ட தனிவழியில் மணமேடைக்கு வந்து, அன்றைய குடியரசுத்தலைவர் விவி.கிரி, மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருடன் இணைந்து, வாழ்த்தும் ஆசியும் வழங்கிய அந்த நிகழ்ச்சி இன்றும் எனது கண்களின் நினைவுகளில் நின்று நிலைத்திருக்கிறது " எனக் கூறியதாக தினகரன் செய்தியில் வெளியாகி இருக்கிறது. காமராஜரை நினைவுக்கூறும் இடங்களில் இதை பலமுறை ஸ்டாலின் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.



எனினும், ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் வருகை தந்தது உண்மையா, ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா எனத் தேடுகையில் முரசொலி நாளிதழ் செய்தி கிடைத்தது. அதுமட்டுமின்றி, தாய் எனும் இணையதளத்தில் வெளியான ஸ்டாலின் திருமணப் புகைப்படத்தில்  காமராஜர் இடம்பெற்று இருக்கிறார்.





கார்த்திக் சிவசேனாபதியின் முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் திருமணப் புகைப்படங்கள், செய்திகளின் தொகுப்பு வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, பெருந்தலைவர் காமராஜர் இறந்தது அக்டோபர் 2, 1975 மு.க ஸ்டாலினுக்கு திருமணம் ஆனது அக்டோபர் 20, 1975 என பரவும் தகவல் தவறானது. விக்கிப்பீடியா தகவலை பார்த்து தவறாகப் பரப்பி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் திருமணத்தில் காமராஜர் கலந்து கொண்டது தொடர்பாக செய்திகள், புகைப்பட ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க