YouTurn

போக்குவரத்து நெரிசலிலும் விதியை மீறாத மிசோரம் மக்கள்|வைரலாகும் புகைப்படம் ?

போக்குவரத்து நெரிசலிலும் விதியை மீறாத மிசோரம் மக்கள்|வைரலாகும் புகைப்படம் ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சாலை போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக விதிகளை மீறி வேகமாக செல்வது, பிறருக்கு வழிவிடாமல் நுழைந்து செல்வது உள்ளிட்ட பலவற்றை கூறலாம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் போக்குவரத்து விதிமுறையை கடைபிடித்து கோட்டை தாண்டாமல் காத்திருக்கும் மிசோரம் மாநில வாகன ஓட்டிகளின் புகைப்படங்கள் சமூக...

பரவிய செய்தி

மிசோரமில் உள்ள ஐசாவ்ல் பகுதியில் இருந்து காட்சி. போக்குவரத்து நெரிசல் உண்டான நேரத்திலும் சாலையில் கோட்டை தாண்டி செல்லவில்லை. வடகிழக்கு மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள அதிகம் உள்ளது.

விரிவான விளக்கம்

சாலை போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களாக விதிகளை மீறி வேகமாக செல்வது, பிறருக்கு வழிவிடாமல் நுழைந்து செல்வது உள்ளிட்ட பலவற்றை கூறலாம். ஆனால், போக்குவரத்து நெரிசலில் போக்குவரத்து விதிமுறையை கடைபிடித்து கோட்டை தாண்டாமல் காத்திருக்கும் மிசோரம் மாநில வாகன ஓட்டிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் நிறைந்த நேரத்திலும் எதிரே வரும் வாகனங்களுக்கு வழியை விட்டு சாலை நடுவில் இருக்கும் கோட்டினை தாண்டாமல் வரிசையாக காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் புகைப்படமே பாராட்டுகளை பெற்று வருகிறது.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் செய்து தேடுகையில், ஒரே படத்தை சமூக ஊடகங்கள், இணைய பக்கங்கள் என பல தளங்களில் பதிவிட்டு இருப்பதை காண முடிந்தது. பல பதிவுகளில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால்(Aiswal) என்றே குறிப்பிட்டு இருந்தனர்.



அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, அப்படத்தில் உள்ள வாகனம் ஒன்றின் பதிவு எண் MZ 01 என இடம்பெற்று இருந்ததை காண முடிந்தது. அந்த பதிவு எண்ணை வைத்து தேடியதில், மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசாவ்ல்(Aizawl) பகுதியை சேர்ந்த வாகனங்கள் என உறுதி செய்ய முடிந்தது.



மிசோரம் மாநில போக்குவரத்து குறித்து பரவும் இப்படத்தை தவிர பல படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு உள்ளன. ஜூன் 14-ம் தேதி My World என்ற முகநூல் கணக்கில் மேலும் சில புகைப்படங்கள் பதிவிட்டு உள்ளனர்.



பெரிய சாலைகளில் மட்டுமின்றி குறுகலான பாதையிலும் கூட மக்கள் போக்குவரத்து விதிமுறையை சரியாக கடைப்பிடிக்கின்றனர் என்பதை இப்படங்கள் விளங்குகின்றன.

மிசோரம் போக்குவரத்து விதிமுறை :

1,70,000 மக்கள் தொகை கொண்ட மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசாவ்ல் நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய போக்குவரத்து விதிமுறையை அம்மாநில அரசு நடைமுறைக்கு ஜூன் 1-ம் தேதி முதல் கொண்டு வந்து உள்ளது.

அதன்படி, வாகனத்தில் பதிவு எண்ணில் இறுதியில் இருக்கும் எண்ணிற்கு ஏற்ப வாகனம் இயக்க வேண்டிய தேதிகள் அளிக்கப்பட்டு உள்ளன. அந்த அந்த வாகனங்கள் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மட்டுமே இயங்க வேண்டும்.

உதாரணமாக, 1 மற்றும் 2 என்ற எண்ணை இறுதியாக கொண்ட வாகனங்கள் திங்கட்கிழமை மட்டுமே இயங்க வேண்டும். எனினும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினத்தன்று அனைத்து வாகனங்களும் இயங்கலாம். இதன் மூலம் தினந்தோறும் 23,800 வாகனங்களின் பயன்பாடு குறையும் என எதிர்பார்த்தனர்.



ஐசாவ்ல் நகரில் மேற்கொண்டு வரும் புதிய போக்குவரத்து விதிமுறைகள் நெரிசலை குறைக்கும் என அரசு நம்புகிறது. அதற்கு உறுதுணையாக மக்களும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து வருவது சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது. சிலர் தங்கள் மாநிலத்திலும் இவ்வாறு போக்குவரத்து விதிமுறையை கடைப்பிடிப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி நடந்தால் அனைவருக்கும் பாதுகாப்பானதே.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…