YouTurn

சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன்' பெயர் வைத்தது தவெக அரசா? உண்மை என்ன?

சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன்' பெயர் வைத்தது தவெக அரசா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட நிர்வாக முயற்சிகளின் காரணமாக தான் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது .

பரவிய செய்தி

குடும்ப உறுப்பினர்கள் என ஒரே குடும்பத்தின் பெயர்களை தெருக்களுக்கு சூட்டிய பழைய ஆட்சி…

இன்று நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர் மேஜர் முகுந்த் அவர்களின் பெயரை சாலைக்கு சூட்டும் அரசு!

குடும்ப அரசியலில் இருந்து மக்கள் அரசியலுக்கு…

இதுதான் விஜயின் அரசு.
இதுதான் மக்களின் அரசு. @TVKVijayHQ


image.png


Link / Archive Link 


விரிவான விளக்கம்

2014 ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். அவரது வீடு கிழக்கு தாம்பரத்தில் உள்ளதால், வேளச்சேரி முதல் தாம்பரம் வரை அமைந்துள்ள 16 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைக்கு, அவரது பெயர் வைக்க தாம்பரம் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இவ்வாறு  வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன்’ பெயர் சூட்டப்பட விஜய் தலைமையிலான தவெக அரசு தான் காரணமென்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு ‘மேஜர் முகுந்த் வரதராஜன்’ பெயர் சூட்டப்படுவது குறித்த செய்திகளை தேடினோம். கடந்த ஜூன் 12ஆம் தேதி ’NDTV’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.  


அதன்படி, கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தாம்பரம் நகராட்சி நிர்வாக இயக்குநர் நகராட்சி மன்றத்துக்கு எழுதிய கடிதத்தில் ‘தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்று பெயர் மாற்றும் முன்மொழிவை தீர்மானமாக நிறைவேற்றுமாறு’ குறிப்பிட்டிருந்தார். 



அதன்பிறகு, நகராட்சி மன்றத்தில் இந்த தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்ற ’நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை’யின் முதன்மை செயலாளரிடன் அனுமதி கோரப்பட்டது. அதன்பின்னர் 2025 அக்டோபர் மாதம் இந்த தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 


இதன் தொடர்ச்சியாகத் தான், தற்போது தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் தாம்பரம் நகராட்சி மன்றத்தில் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, 2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட நிர்வாக முயற்சிகளின் காரணமாக தான் தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


முடிவு:


2025 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிர்வாக ரீதியான முயற்சிகள் காரணமாக தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என்று பெயர் மாற்றம் செய்யும் நீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை திரித்து, தவெக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறாக பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க