YouTurn

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிறப்பை விட இறப்பு அதிகமாக இருக்கிறதா? உண்மை என்ன?

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிறப்பை விட இறப்பு அதிகமாக இருக்கிறதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

சமீபத்திய 2023 CRS அறிக்கையின் தரவுகளின் படி தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

பரவிய செய்தி

’இந்தியாவில் பிறப்பை விட இறப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்’ - News 18 தமிழ்நாடு. 



Archive Link

விரிவான விளக்கம்

’இந்தியாவில் பிறப்பை விட இறப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம். தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை தான் அதிகமாக உள்ள என்று ’News 18 தமிழ்நாடு’ செய்தியை பதிவிட்டு, தமிழ்நாட்டில் மது பழக்கம் அதிகமாக இருப்பதால் தான் இவ்வாறு பிறப்பை விட இறப்பு அதிகமாக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.



உண்மை என்ன?


இந்தியாவில் பிறப்பு இறப்பு குறித்து  விவரங்கள் ‘Civil Registration System’ன் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆவணமாக ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான CRS அறிக்கை தான் கடைசியாக வெளியிடப்பட்டது. 


2023 CRS அறிக்கையில், ஒவ்வொரு மாநிலத்திற்கு மாவட்ட வாரியாக பிறப்பு இறப்பு குறித்த தரவுகள் இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 


அதேபோல் 2022  CRS அறிக்கையின் படி, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 



மேலும், 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 9,02,718 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் 6,93,205 இறப்புகள் பதிவு செய்யப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பிறப்பை விட இறப்பு குறைவாகவே இருக்கிறது. 


மேலும், தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிறப்பை விட இறப்பு அதிகமாக இருப்பதாக ‘News 18 தமிழ்நாடு’ வெளியிட்டுள்ள செய்தி, 2021ஆம் ஆண்டிற்கான CRS அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த செய்தி 2025 மே மாதம் வெளியிடப்பட்டுள்ளது. 2022 CRS அறிக்கை 2025 ஜூன் மாதமும், 2023 CRS அறிக்கை 2025 அக்டோபர் மாதமும் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  


2021 கொரோனா பெருந்தொற்று நிகழ்ந்த ஆண்டு என்பதும் அப்போது நாடு முழுவதும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்,  ‘News 18 தமிழ்நாடு’ இந்த செய்தியை வெளியிடும் போது 2022 CRS அறிக்கை வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, சமீபத்திய 2023 CRS அறிக்கையின் தரவுகளின் படி தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிறப்பை விட இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 


முடிவு:


பழைய தரவுகளை கொண்டு தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் பிறப்பைவிட இறப்பு அதிகமாக இருப்பதாக திரித்து பரப்பி வருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க