யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு, தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தன் மீது எவ்வித வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளார்.
பரவிய செய்தி
ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவங்க இரண்டு பேரில் யாருக்கு ஓட்டு போட்டால் அந்த மக்களுக்கு நல்லது?
விரிவான விளக்கம்
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரமும் முடிவடைந்தது.
இந்நிலையில், ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனக் குறிப்பிட்டு, அத்தொகுதி தவெக வேட்பாளர்களுடன் அவரை ஒப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Hey @grok இவங்க ரெண்டு பேருல மக்கள் யாருக்கு ஒட்டு போட்ட அந்த மக்களுக்கு நல்லது pic.twitter.com/635ezDkMkj
உண்மை என்ன?
பரவி வரும் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய, ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற தேர்தலையொட்டி தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தை ஆய்வு செய்தோம். அதில் தன்மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் எதுவும் இல்லை என்றே குறிப்பிட்டுளார்.

இந்நிலையில் அப்பாவு மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஆதாரப்பூர்வமற்ற செய்திகளை சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முடிவு:
நம் தேடலில், அப்பாவு மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.