YouTurn

அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய அரிசி பையில் "நாளைய முதல்வர்" வாசகமா?| ஃபோட்டோஷாப் வேலை .

அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய அரிசி பையில் "நாளைய முதல்வர்" வாசகமா?| ஃபோட்டோஷாப் வேலை .

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகம் தினந்தோறும் ஊடங்களில் காட்டப்பட்டு வந்தது. இதையடுத்து, அமைச்சரின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கின. ஒருகட்டத்தில் நாளைய முதல்வர் என்ற வாசகத்துடன் அவர் தொடர்பான பதிவுகள் வெளியாகின...

பரவிய செய்தி

அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய அரசி பைகளில் " நாளைய முதல்வர் " வாசகம்.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முகம் தினந்தோறும் ஊடங்களில் காட்டப்பட்டு வந்தது. இதையடுத்து, அமைச்சரின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கின. ஒருகட்டத்தில் நாளைய முதல்வர் என்ற வாசகத்துடன் அவர் தொடர்பான பதிவுகள் வெளியாகின.

பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகங்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வந்தார். இதற்கு காரணம், முதல்வர் பழனிச்சாமிக்கும், அமைச்சருக்கும் ஏற்பட்ட மோதல் என விவாதங்கள் எழுந்தன.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தன் தொகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களாக அரசி மற்றும் கோதுமை வழங்கும் பணியில் இறங்கினார். அப்படி வழங்கப்பட்ட அரிசி பைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் புகைப்படத்துடன் தன்னுடைய புகைப்படத்தையும் அச்சிட்டு இருந்தார். தன் தொகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் வீடியோக்களை அமைச்சர் விஜயபாஸ்கரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து இருந்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய நிவாரண பொருட்களின் பைகளில் அவரின் புகைப்படத்திற்கு கீழே " நாளைய முதல்வர் " என்ற வாசகம் இடம்பெற்று உள்ளதாக வட்டமிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகின.



Twitter link | Archive link 

ஆனால், அமைச்சர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நேரடியாக மக்களுக்கு கொடுத்த அரிசி பைகளில் " நாளைய முதல்வர் " என்ற வாசகம் இடம்பெறவில்லை. அமைச்சருக்கு எதிரான யாரோ அப்பைகளில் " நாளைய முதல்வர் " என்ற வாசகத்தை அச்சிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.



முடிவு : 

நம்முடைய தேடலில், அமைச்சர் விஜயபாஸ்கர் தன் தொகுதி மக்களுக்கு வழங்கிய நிவாரண பொருட்களில் "நாளைய முதல்வர்" என்ற வாசகம் இடம்பெற்றதாக வைரலாகும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…