YouTurn

அமைச்சர் வேலுமணி குடோனில் பணக் குவியல் எரிந்ததாக வதந்தி!

அமைச்சர் வேலுமணி குடோனில் பணக் குவியல் எரிந்ததாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பணக் குவியல் தீயில் எரிந்ததாக வாட்ஸ் ஆஃப் பார்வர்டுகள் அதிகம் பகிரப்பட்டன. அவையே ஃபேஸ்புக் உள்ளிடவையிலும் பதிவிடப்பட்டு ஆயிரக்கணக்கான ஷேர்,பார்வைகளை கடந்து செல்கிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இதே வீடியோவை...

பரவிய செய்தி

நேற்று தமிழக அமைச்சர் வேலுமணி அவர்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து ! சேதாரம் சிறுசு தான். இந்த வீடியோவை  பார்த்த உடன் 10 பேருக்கு அனுப்பவும்.



 

 

விரிவான விளக்கம்

தமிழக அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பணக் குவியல் தீயில் எரிந்ததாக வாட்ஸ் ஆஃப் பார்வர்டுகள் அதிகம் பகிரப்பட்டன. அவையே ஃபேஸ்புக் உள்ளிடவையிலும் பதிவிடப்பட்டு ஆயிரக்கணக்கான ஷேர்,பார்வைகளை கடந்து செல்கிறது.



தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இதே வீடியோவை தமிழக அரசியல்வாதி ஒருவரின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து எனக் கூறி அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர்.

தீயில் எரிந்த பணக் குவியல் வீடியோவை பார்த்த பலரும் அது இந்திய ரூபாய் அல்ல, வெளிநாட்டு பணம் என கமெண்ட்களில் பதிவிட்டு வருகிறனர். இருப்பினும், இந்த வீடியோ அதிவேகமாக பரவிக் கொண்டே செல்கிறது.

வீடியோவில் 2000ரூபாய் போன்று நோட்டு கட்டுகள் இருந்தாலும், அவை யாவும் இந்தியா ரூபாய் நோட்டுகள் அல்ல. வெளிநாட்டு பணத்திற்கும், இந்திய பணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பகிர்ந்து வருகின்றனர்.



மறுபுறம், இது உண்மையில் நடந்த தீ விபத்தில் நிகழ்ந்தவையா ? எனவும் தோன்றுகிறது. இதே படங்களை 2018 பிப்ரவரியில் Alejandro Monge Art என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.



அதில், பணக் குவியல் போன்று கலை வடிவமைப்பை உருவாக்குவதும், அவை எரிந்தது போன்றும்  புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்து உள்ளனர்.

தேர்தல் நேரத்தில் அரசியல் சார்ந்த வதந்திகள், பொருந்தாத செய்திகள் அதிகம் வலம் வருவதால், செய்திகளை பகிர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.