YouTurn

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் என ராஜேந்திர பாலாஜி கூறியதாக போலிச் செய்தி!

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் என ராஜேந்திர பாலாஜி கூறியதாக போலிச் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குதான் அதிகமாக இருக்கிறது. எஸ்.வி சேகரை சந்தித்துவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேட்டி.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குதான் அதிகமாக இருக்கிறது என எஸ்.வி சேகரை சந்தித்த பின் பேட்டி அளித்ததாக நியூஸ்7 தமிழ் செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?

" தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குதான் அதிகமாக இருக்கிறது " என ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஏதும் செய்தி இருக்கிறதா என நியூஸ்7 தமிழ் முகநூல் பக்கத்தை ஆராய்கையில் அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.

ஸ்க்ரீன்ஷார்ட்டில் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், எஸ்.வி சேகர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஜனவரி 9-ம் தேதி " என் நண்பர் நெல்லை வசந்தன் மூலமாக எதிர்பாராத இனிய சந்திப்பு " என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.



Twitter link | Archive link 

வைரலாகும் நியூஸ்7 தமிழ் ஸ்க்ரீன்ஷார்ட் குறித்து எஸ்.வி.சேகரை தொடர்பு கொண்டு பேசிய போது, " அவர் என்னிடம் அப்படி ஏதும் கூறவில்லை. இப்படியெல்லாம் பேசவும் மாட்டார்கள் " எனப் பதில் அளித்து இருந்தார்.

செய்தி நிறுவனங்களின் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களில் நிறுவனத்தின் லோகோ இல்லாமல் செய்தி வெளியிடுவதில்லை. வைரலாகும் ஸ்க்ரீன்ஷார்ட்டில் அப்படி எந்த லோகோவும் இல்லை.

தமிழகத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என இரு கட்சியைச் சேர்ந்வர்களும் பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு குறிப்பிட் சமுகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தை ஆள்வது குறித்து பேச சிறிதும் வாய்ப்பில்லை. இது வாக்கு வங்கியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் போலியான செய்தியை எடிட் செய்து வைரல் செய்வதை நாம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம்.

முடிவு :

நம் தேடலில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் உடன் எஸ்.வி சேகர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து எடிட் செய்யப்பட்ட போலியான செய்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க