YouTurn

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மார்வாடிகளை உயர்த்தி கருத்து கூறினாரா ?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மார்வாடிகளை உயர்த்தி கருத்து கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் மார்வாடிகளுக்கு ஆதரவாகவும், தமிழர்களை இழிவுப்படுத்தியும் கருத்து ஒன்றை வெளியிட்டதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. உண்மையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மார்வாடிகள் மற்றும் தமிழர்களை இணைத்து சர்ச்சையான கருத்தை...

பரவிய செய்தி

மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் மார்வாடிகளுக்கு ஆதரவாகவும், தமிழர்களை இழிவுப்படுத்தியும் கருத்து ஒன்றை வெளியிட்டதாக தந்தி டிவி நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



உண்மையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மார்வாடிகள் மற்றும் தமிழர்களை இணைத்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருந்தாரா என்பதை தேடி பார்த்தோம். தந்தி டிவி செய்தியில் பிப்ரவரி 29-ம் தேதி வெளியான செய்திகளை தேடிய பொழுது, " அதிமுக-திமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றால் கமல்ஹாசன் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் " என தெரிவித்ததாக நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



Facebook link | archived link  

நடிகர் கமலின் அரசியல் கூட்டணி குறித்து விமர்சித்து கூறிய செய்தியில் " மார்வாடிகள் மற்றும் தமிழர்கள் " குறித்து தவறான கருத்தை ஃபோட்டோஷாப் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.



சமீப காலமாகவே அதிக அளவில் செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டில் சர்ச்சையான கருத்துகளை அரசியல்வாதிகள், நடிகர்கள் கூறியதாக ஃபோட்டோஷாப் செய்தி பரப்பி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

முடிவு : 

நமது தேடலில் இருந்து, மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதியாகி உள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…