யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
எனது கொளுந்தியா மக்கள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை - மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது கொழுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறியதாக நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?
செப்டம்பர் 17-ம் தேதி நியூஸ் 7 தமிழ் செய்தியில், " தாமதமாக அழைப்பு வந்ததால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை - மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் " என்றே வெளியாகி இருக்கிறது.
Facebook link
மேற்காணும் நியூஸ் கார்டில் எடிட் செய்து சமூக வலைதளங்களில் தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என நியூஸ் 7 தமிழும் தெரிவித்து இருக்கிறது.
இதற்கிடையில், தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த செளதா மணி என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகும் போலியான நியூஸ் 7 தமிழ் செய்தி பகிரப்பட்டு இருக்கிறது. அதைப் பகிர்ந்த அமைச்சர் பி.டி.ஆர், " வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில் எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா " எனத் திட்டி பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link
முடிவு :
நம் தேடலில், எனது கொழுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்க அளித்ததாக பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.