YouTurn

மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் நாமத்தை பாடியதாக பரவும் டப்பிங் வீடியோ !

மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் நாமத்தை பாடியதாக பரவும் டப்பிங் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அல்லாஹ்வின் திருநாமங்களை மைக்கல் ஜாக்சன் உச்சரிக்கும் விதம் நம் எத்தனைபேர் கேட்டிருப்போம்?



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

உலக புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் " அல்லாஹ்வின் திருநாமங்களை " உச்சரிக்கும் விதத்தைப் பாருங்கள் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சியை ரசிக்கும் 2 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





இந்த வீடியோ குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதுகுறித்து தேடும் போது கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைதளங்களில் இவ்வீடியோ பகிரப்பட்டு வருவதை பார்க்க முடிந்தது.

உண்மை என்ன ?

மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் நாமத்தை உச்சரித்து பாடியதாக வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடிய போது, " Give Thanks to Allah " எனும் தலைப்பில் மைக்கேல் ஜாக்சனின் இவ்வீடியோ உலக அளவில் வைரலாகி இருக்கிறது. ஆனால், அது உண்மையான வீடியோ அல்ல.



" 1993-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பில் கிளிண்டனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சன் " Gone to soon " மற்றும் " Heal the world " எனும் பாடல் நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அந்த வீடியோவில் தென் ஆப்பிரிக்கா பாடகர் சாயின் பீகா பாடிய பாடலை இணைக்கப்பட்டு உள்ளது " என thenews இணையதளம் 2018-ல் வெளியிட்டு இருக்கிறது.



1993-ல் பில் கிளிண்டன் முன்னிலையில் மைக்கேல் ஜாக்சன் நடத்திய " Gone to soon " மற்றும் " Heal the world " நிகழ்ச்சியின் உண்மையான வீடியோவில் 53-வது நொடிகளில் இருந்தே வைரல் செய்யப்படும் காட்சி எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த பகுதியில் உண்மையாக இடம்பெற்றதை வீடியோவில் கேட்கலாம்.

முடிவு :

நம் தேடலில், மைக்கேல் ஜாக்சன் அல்லாஹ்வின் திருநாமங்களை உச்சரிக்கும் விதம் என வைரல் செய்யப்படும் வீடியோ டப்பிங் செய்யப்பட்ட போலியான வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க