யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
சீமான் போன்ற பொறுக்கிகளை எல்லாம் வெளியில் நடமாடவிடுகிறீர்கள் எனக்கு மட்டும் ஜாமீன் தர மறுப்பதா என நீதிபதி முன்பு மீரா மிதுன் கதறல். தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
நடிகை மீரா மிதுன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நீதிபதியிடம் தனக்கு ஜாமின் கேட்டதாக புதிய தலைமுறையின் செய்தியின் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.

உண்மை என்ன ?
மீரா மிதுன் பட்டியல் சமூகத்தினரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் பல புகார்கள் அவர் மேல் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை போலீசார் மீரா மிதுனை கைது செய்தனர். மீரா மிதுன் மீது 4 வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், " அடுத்தடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டும் வகையில் மனதளவில் டார்ச்சர் செய்கிறார்கள் என்று நீதிபதி முன்பு மீரா மிதுன் கதறி அழுதார். அதையடுத்து, மீரா மிதுன் சார்பில் இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமின் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர் " என நியூஸ் 18 செய்தியில் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 3-ம் தேதி புதியதலைமுறை செய்தியில், " தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நடிகை மீரா மிதுன் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியிடம் புகார் " என்றே நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.
புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டில் மீரா மிதுன் சீமானை விமர்சித்தது போன்று எடிட் செய்து வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.

முடிவு :
நம் தேடலில், சீமானை விமர்சித்து மீரா மிதுன் நீதிபதியிடம் ஜாமின் கேட்டதாக பரப்பப்படும் புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
அதிபர் தாக்கப்பட்டார்..😂@SeemanOfficial pic.twitter.com/i9pGXJatST
— ரிட்டயர்டு வில்லன்™🔥 (@boopathi_twit) September 3, 2021