YouTurn

மாத்திரை அட்டையில் சிவப்பு நிறக் கோடு எதைக் குறிக்கிறது ?

மாத்திரை அட்டையில் சிவப்பு நிறக் கோடு எதைக் குறிக்கிறது ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் வியாதிகளுக்கு பஞ்சமில்லை. அதனைச் சார்ந்த மருந்து, மாத்திரைகளின் விற்பனையும் பன்மடங்கு அதிகம். இதில், சாதாரண காய்ச்சல், இருமல் தொடங்கி கடுமையான பாதிப்பை அளிக்கும் நோய்களுக்கும் கூட மருந்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயோடிக் மருந்துகளைப் பயன்படுத்தியும் வருவதுண்டு. சிவப்பு நிறக் கோடு :...

பரவிய செய்தி

மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அந்த மாத்திரையை டாக்டர் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது என்று அர்த்தம். கவனத்தில் வையுங்கள், அனைவருக்கும் பகிருங்கள்.

விரிவான விளக்கம்

இந்தியாவில் வியாதிகளுக்கு பஞ்சமில்லை. அதனைச் சார்ந்த மருந்து, மாத்திரைகளின் விற்பனையும் பன்மடங்கு அதிகம். இதில், சாதாரண காய்ச்சல், இருமல் தொடங்கி கடுமையான பாதிப்பை அளிக்கும் நோய்களுக்கும் கூட மருந்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயோடிக் மருந்துகளைப் பயன்படுத்தியும் வருவதுண்டு.

சிவப்பு நிறக் கோடு :



நன்கு படித்தவர்கள் கூட மருந்துகளின் விளைவுகள் பற்றிய பகுத்தறிவு இன்றி ஆன்டிபயோடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துக்கின்றனர். விற்பனை செய்யப்படும் சில ஆன்டிபயோடிக் மருந்துகளின் பின்புறத்தில் சிவப்பு நிறத்தில் கோடுகள் இருப்பதைக் காண முடிந்தால் அது எதனைக் குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தேவையற்ற மருந்துகளின் பயன்பாடுகளை மற்றும் டிபி, மலேரியா, சிறுநீரக பாதை தொற்று போன்ற பல தீவிர நோய்களுக்கும் கூட ஆன்டிபயோடிக் மருந்துகள் விற்பனை நிலையங்களில் நடைபெறும் அதிகளவிலான விற்பனையைக் கண்டிப்பதே சிவப்பு நிறக் கோட்டின் நோக்கமாகும்



 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மாத்திரை அட்டைகளில் சிவப்பு நிறம் இடம்பெறுவதை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தனர். இதற்காக “ Medicine with red line “ எனும் ஆன்டிபயோடிக் மாத்திரைகளின் தேவையற்ற பயன்பாடு தொடர்பான பகுத்தறிவை பரவச் செய்ய விழிப்புணர்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது மத்திய அரசு.

காசநோய் பாதிப்பில் உலகளவில் அதிக அளவிலான நோய் பாதித்தவர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக  23 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதிக வருமானம் அளிக்கும், விலை குறைவு, ஒரு முறையற்ற தொடர்ச்சியான விற்பனை மற்றும் எளிய மக்களின் வாழ்க்கையில் மருத்துவமனை செல்ல இயலாமை போன்றவற்றால் ஆன்டிபயோடிக் பயன்பாடு அதிகரிக்கிறது.



2014 ஆகஸ்ட்டில் வெளியான “ The lancet infectious diseases "  என்ற பத்திரிகை அறிக்கையில், 2010 வரையில் இந்தியாவில் 13 பில்லியன் யூனிட்ஸ் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இது உலகிலேயே அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிட்டனர். 2005 முதல் 2009 ஆம் ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தீவிரமான நோய்களுக்கு விற்பனை நிலையங்களில் கிடைக்கும் ஆன்டிபயோடிக் மருந்துகளை சார்ந்து இருக்காமல், மருத்துவரை அணுகுங்கள். சிவப்பு நிறக் கோடு இடம்பெற்ற மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி பயன்படுத்த வேண்டாம். சமூக வலைத்தளங்களில் நோய் சிகிச்சைக்கான மருந்து என பரவும் செய்திகளையும் நம்ப வேண்டாம்.

சுருக்கமாக

இந்தியாவில் ஆன்டிபயோடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தீவிர நோய்களுக்கும் மருத்துவரின் பரிந்துரை இன்றி ஆன்டிபயோடிக் மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றனர். இதனை குறைக்கும் நோக்கமாகவும், விழிப்புணர்வுக்கும் மாத்திரையின் பின்புறம் சிவப்பு கோடுகள் இடம்பெற்றுகின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.