YouTurn

கன்னியாகுமரி அருகே ராட்சத பாம்பு என பழைய வீடியோவை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள்!

கன்னியாகுமரி அருகே ராட்சத பாம்பு என பழைய வீடியோவை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றதாகக் குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய வீடியோவை, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு எனக் குறிப்பிட்டு புதிய தலைமுறை, பாலிமர் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

பரவிய செய்தி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்புimage.png

Archived Link

விரிவான விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சாலையை கடந்து சென்ற ராட்சத மலைப்பாம்பு எனக் குறிப்பிட்டு புதிய தலைமுறை, பாலிமர் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். 



உண்மை என்ன? 

ஊடகங்களில் பரவி வரும் இந்த செய்தி குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது கடந்த மார்ச் 05, 2022 அன்று முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான Susanta Nanda இந்த வீடியோவைத் தனது X பக்கத்தில் வெளியிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால், இது எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று அவர் விளக்கமளித்திருக்கவில்லை.


இது குறித்து மேலும் தேடிய போது, ETV Bharat செய்தி ஊடகத்தில் "Watch a 12 feet long python crossing road in Karnataka's Karwar" என்ற தலைப்பபில் பரவி வரும் வீடியோ குறித்து மார்ச் 06, 2022 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டம், கார்வார் நகருக்கு அருகிலுள்ள ஹனகோனா கிராமத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும்  Times of India ஊடகப்பக்கத்தில், "This snake's video has gone viral on social media, but it's not an ‘anaconda’" என்ற தலைப்பில் மார்ச் 20, 2022 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மலைப்  பாம்பு ஒன்று சாலையைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

எனவே, கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்பதாக இவ்வீடியோ பரவி வந்தாலும், உண்மையான நிகழ்விடம் தெரியவில்லை. குறிப்பிட்ட பழைய வீடியோவே தற்போது கன்னியாகுமரியில் சாலையைக் கடந்த மலைப்பாம்பு என்று ஊடகங்கள் தவறான செய்தி பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க