YouTurn

பழனிச்சாமி மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் என மயில்சாமி கூறினாரா ?

பழனிச்சாமி மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் என மயில்சாமி கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி - நடிகர் மயில்சாமி



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி சட்டப்பேரவை தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்நிலையில், " கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி " என மயில்சாமி கூறியதாக ABP நாடு உடைய நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ABP நாடு செய்தி சேனலின் முகநூல் பக்கத்தை தேடிப் பார்க்கையில், மயில்சாமி குறித்த நியூஸ் கார்டு ஏதும் வெளியாகவில்லை. இதுகுறித்து ABP நாடு சேனலின் ஆசிரியர் மனோஜ் அவர்களிடம் பேசுகையில், " இது போலியானது, நாங்கள் வெளியிடவில்லை " எனத் தெரிவித்து இருந்தார்.



ABP நாடு முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 22-ம் தேதி, "  விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும் - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி " என வெளியான நியூஸ் கார்டில் எடிட் செய்து போலிச் செய்தியை பரப்பி வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என நடிகர் மயில்சாமி கூறியதாக பரவும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க