YouTurn

மே18-ஐ தேசிய வெற்றி நாளாக கொண்டாடிய பிட்சா ஹட் ஸ்ரீலங்கா !

மே18-ஐ தேசிய வெற்றி நாளாக கொண்டாடிய பிட்சா ஹட் ஸ்ரீலங்கா !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்ட பிறகு ஒவ்வொரு வருடமும் அதே நாளில் உலக தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட்...

பரவிய செய்தி

இன்றைய சிறப்பான நாளில் ஸ்ரீலங்காவின் ஹீரோக்களை கொண்டாடுவோம் - பிட்சா ஹட் ஸ்ரீலங்கா

விரிவான விளக்கம்

2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நிகழ்த்தப்பட்ட பிறகு ஒவ்வொரு வருடமும் அதே நாளில் உலக தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு மே 18-ம் தேதி 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட் நிறுவனம் தன் முகநூல் பக்கத்தில் மே 18-ம் தேதியை தேசிய வெற்றி நாளாக கொண்டாடுவோம் என வெளியிட்ட பதிவு தமிழர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது.



Twitter link | archive link 

மே 18-ம் தேதியை போரில் வெற்றிப் பெற்ற நாளாக இலங்கை அரசு அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. அதை பின்பற்றி பிட்சா ஹட் நிறுவனமும் தன் முகநூல் பக்கத்தில் அந்நாளை கொண்டாடுவதாக பதிவிட்டது.



பிட்சா ஹட் பதிவு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வைரல் செய்யப்பட்டது. இதையடுத்து, இலங்கை பிட்சா ஹட் உடைய முகநூல் பக்கத்தில் இருந்து அப்பதிவு நீக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த முகநூல் பக்கமே deactivate செய்யப்பட்டுள்ளது.



இலங்கையைச் சேர்ந்த பிட்சா ஹட் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் உலகத் தமிழர்கள் தரப்பில் இருந்து கண்டனக்குரல்கள் தொடர்ந்து எழுகின்றது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க