யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
“ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பா.ஜ.க ஆதரவாளர் ‘யூட்யூப் மாரிதாஸ்' மீது தொடரப்பட்ட வழக்கினை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஆலோசனையின் படி மாரிதாஸ் தலைமறைவாகியுள்ளதாக தகவல்” என ஜூனியர் விகடன் ஜனவரி 10ம் தேதி நியூஸ் கார்டு வெளியிட்டதாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
https://twitter.com/thechanakkiyan/status/1612767760244961281?t=tU9d_dxTYBL2Q7ZesaaWWA&s=08
Archive link
https://twitter.com/jaya2016maha/status/1612778308768522244
Archive link
உண்மை என்ன ?
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து அவதூறு பரப்பியதற்காக மாரிதாஸ் மீது வழக்குப் பதியப்பட்டது. அவ்வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்தது தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
https://twitter.com/Kalaignarnews/status/1612446660780756999
Archive link
அதனைத் தொடர்ந்து, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து அளிக்கப்பட்டத் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. மேலும், "மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்தது சரியல்ல” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து செய்திகளும் வெளியானது.
இந்நிலையில் மாரிதாஸ் தலைமறைவாகியுள்ளதாகச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து ஜூனியர் விகடனின் சமூக வலைத்தளங்களில் தேடினோம். அப்படி எந்த நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை. அதுமட்டுமின்றி, மாரிதாஸ் தலைமறைவு குறித்து வேறு எந்த செய்திகளும் வெளியாகவில்லை.

மேலும், Maridhas Answers என்ற அவரது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஏதேனும் பதிவிட்டுள்ளாரா எனத் தேடினோம். ஜனவரி 10ம் தேதி, மாலை 5.30 மணிக்கு “திருடர் குல திலகம் வாரிசை கேள்வி கேட்க “துணிவு” இல்லாத Revune Department. Varisu | Thunivu | Ticket” என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டுள்ளார். இதில் இருந்து இது ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் என தெரிகிறது.
முடிவு :
நம் தேடலில், யூடியூபர் மாரிதாஸ் தலைமறைவு என திமுகவினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. அவர் தலைமறைவானதாக எந்த செய்தி ஊடகங்களிலும் செய்தி வெளியாகவில்லை என அறிய முடிகிறது.