
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மாரிதாஸ் உடைய குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்ட நியூஸ் 18 தலைமை நிர்வாகம் முதற்கட்ட ஆய்வில் குற்றச்சாட்டு சரி என கண்டறிந்து உள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக கூறி அவருக்கே அனுப்பிய இமெயில் என இந்த ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மெயிலில் நியூஸ்18 ஆசிரியர்...
பரவிய செய்தி

Facebook link | archive link
விரிவான விளக்கம்
News18 நிர்வாக தலைமை நாங்கள் முன் வைத்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் கட்ட ஆய்வில் குற்றச்சாட்டுகள் சரி என்று கண்டறிந்துள்ளனர். அதன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வேலையை நடந்து வருகிறது.
News18Tamil விவகாரம் சார்ந்து இன்று வீடியோ வெளியிடப்படும்.
— Maridhas (@MaridhasAnswers) July 10, 2020
Twitter link | archive link

இது குறித்து, நியூஸ் 18 இணையதள ஆசிரியர் வினய் சராவகியை யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் தொடர்பு கொண்டு பேசிய போது, வினய் சராவகி என்ன என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார். பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை எங்களின் செய்தித்தொடர்பாளர் குழு தான் அளிக்க வேண்டும் எனக்கூறி அவர்களின் குழுவைச் சேர்ந்த சுப்ரியா சக்சேனா என்பவரின் எண்ணை வழங்கினார். சுப்ரியா சக்சேனாவிடம் பேசிய போது, எங்களின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இது ஒரு மோசடியானது. இந்நேரத்தில் இவ்வளதான்தான் தெரிவிக்க முடியும். இதுதொடர்பாக மேல் நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என்கிற தகவலையும் தெரிவித்து இருந்தார்.


வினய் சராவகியும் தன்பெயரில் மோசடி மெயில்கள் ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
There is a forged email in my name circulating on Twitter and WhatsApp. My office has initiated legal action in the matter.
— Vinay Sarawagi (@jagora) July 10, 2020
Twitter link | archive link
ஆக, நியூஸ் 18 தலைமை நிர்வாகம் மெயில் அனுப்பி உள்ளதாக பரப்பி வரும் ஸ்க்ரீன்ஷார்ட் போலியானது என நிரூபணமாகி உள்ளது. தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.