YouTurn

மாரிதாஸிற்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி வாதாடப் போவதாக வதந்தி !

மாரிதாஸிற்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி வாதாடப் போவதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மாரிதாஸ் வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக முடிவு செய்து உள்ளார்.



Twitter link | Archive link

விரிவான விளக்கம்

யூடியூபர் மாரிதாஸ், நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பான வழக்கு, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பதியப்பட்ட வழக்குகள் என தொடர் வழக்குகளை சந்தித்து வருகிறார்.

மேலும் படிக்க : மாரிதாஸ் பரப்பிய வதந்திகள், பொய்களின் தொகுப்பு !

இந்நிலையில், பாஜக ஆதரவாளர் நந்தகோபால் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " மாரிதாஸ் வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக முடிவு செய்து உள்ளார். இதற்காக வழக்கறிஞர்களுடன் சுவாமி ஜி ஆலோசனை " என மாரிதாஸ் மற்றும் சுப்பிரமணியன் சுவாமியின் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார்.





மாரிதாஸ் வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக இருப்பதாக பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.

உண்மை என்ன ?



Twitter link 

ஆனால், இந்த தகவலை சுப்பிரமணியன் சுவாமியே மறுத்துள்ளார். நந்தகோபால் என்பவரின் பதிவில், இது உண்மை இல்லை என சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மாரிதாஸிற்காக ஆஜராக போவதாக பதிவிட்ட பதிவை சுப்பிரமணியன் சுவாமியே மறுத்த பிறகும் அந்த பதிவு நீக்கப்படவில்லை.

முடிவு : 

நம் தேடலில், மாரிதாஸிற்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி வாதாடப் போவதாக பரவும் தகவல் உண்மையில்லை என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க