
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook Link | Archive link
விரிவான விளக்கம்
இது சர்ச்சையாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூஸ் 18 செய்தி நிறுவனம் மாரிதாஸ் மீது 1.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின், குணசேகரன் நியூஸ் 18-ல் இருந்து வெளியேறினார். எனினும், அந்த வழக்கில் விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கில்தான், மாரிதாஸிற்கு எதிராக நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில் ஒன்றரை கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், பொய் செய்திகளை பரப்பக்கூடாது என்றும் உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
மாரிதாஸ் மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக எந்த தகவலும் இல்லை. சொல்லப்போனால், மாரிதாஸ் மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு இடையேயான அவதூறு வழக்கு தற்போதும் நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் வழக்கு குறித்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணையில் யூடியூபர் மாரிதாஸ் சமரசம் செய்து கொள்வதற்காக நெட்வொர்க் 18-ஐ அணுகி இருக்கிறார். அதுதொடர்பாக, நியூஸ் 18 முன்னாள் ஆசிரியர் குணசேகரனும் சமரச உடன்பாடு பெற்றாரா என நீதிபதி கேட்டு இருந்தார்.
No compromise from my side. I was a victim of malicious slander and agenda-driven abuse. The fight for justice will continue with same vigour. அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும். உங்கள் பேரன்புக்கு நன்றி. #MediaFreedom #FightAgainstSlander https://t.co/Q7OOsuTIxr
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) March 5, 2021
Twitter archive link
இந்நிலையில், ஊடகவியலாளர் குணசேகரன், " என் தரப்பில் இருந்து எந்த சமரசமும் இல்லை. தீங்கிழைக்கும் அவதூறு நோக்கம் கொண்ட செயல்களால் நான் பாதிக்கப்பட்டேன். எனவே, அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் எதிரான, நீதிக்கான போராட்டம் சமரசமின்றி தொடரும் " என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் படிக்க : மாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.
கடந்த ஆண்டு நியூஸ் 18 நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தொடர்பாக தன்னுடைய குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டு நெட்வொர்க் 18 தனக்கு அனுப்பிய இமெயில் என மாரிதாஸ் வெளியிட்டார். ஆனால், அது மோசடி இமெயில் என ஆதாரத்துடன் நாம் கட்டுரை வெளியிட்டோம். அந்த மோசடி இமெயில் தொடர்பாக வழக்கும் பதியப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், யூடியூபர் மாரிதாஸ் மீதான குணசேகரன் தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 1 1/2 கோடி அபராதம் விதித்ததாக பரப்பப்படும் தகவல் பொய்யானது. வழக்கு இன்னும் விசாரணையிலேயே உள்ளது என அறிய முடிகிறது.