YouTurn

மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்டதாக தவறாகப் பரவும் சர்ச்சை பாடல் !

மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்டதாக தவறாகப் பரவும் சர்ச்சை பாடல் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சர்ச்சைக்குரிய தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் உடைய நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல். 8 வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை வாந்தி எடுக்க வைத்தேன் என வரிகள் பாடியவர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும்.



Facebook link 

விரிவான விளக்கம்

இயக்குனர் பா.ரஞ்சித் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் ஏற்பாடு செய்து இருந்தார். மதுரையில் நடைபெற நிகழ்ச்சியில் எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மேடையில் கானா பாடலை பாடும் இளைஞரின் பாடலில், " 8ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை வாந்தி எடுக்க வைத்தேன் " என சர்சையைக்குரிய வகையிலும், மோசமான வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தது கண்டனத்தைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்டது என பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?



வைரலாகி வரும் சர்ச்சைக்குரிய கானா பாடலின் வீடியோ கடந்த 2020-ம் ஆண்டு டோனி ராக் எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோ காட்சி கண்டனத்துடன் சமூக வலைதளங்களில் வைரலாகவே அதை மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் இணைத்து தவறாக பரப்பி வருகிறார்கள்.





Archive link

தமிழக பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில், இந்த பாடல் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்ததாக பதிவிட்டு பின்பு நீக்கி இருக்கிறார். மேலும், இந்த கானா பாடல் பழைய வீடியோ, மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியைச் சேர்ந்தது அல்ல. தவறை திருத்திக் கொள்வதாக " பதிவிட்டு இருக்கிறார்.

பெண் பிள்ளைகளை தவறாக சித்தரிப்பவர்களையும், இதுபோன்ற வரிகளை கொண்டு பாடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த பாடல் இடம்பெற்ற வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

முடிவு : 

நம் தேடலில், பா.ரஞ்சித் உடைய நீலம் பண்பாட்டு மையத்தின் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல் எனப் பரவும் வீடியோ தவறானது. இந்த வீடியோவிற்கும், மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சிற்கும் சம்பந்தமில்லை. அந்த பாடல் கடந்த ஆண்டு ஒரு யூடியூப் சேனலில் வெளியானது என அறிய முடிகிறது.

அப்டேட் : 

கண்டனத்தை பெற்று வைரலாகி வரும் கானா பாடலின் வீடியோ கடந்த ஆண்டு பதிவான யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க