யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில், தேவையற்ற வாட்ஸ் அப் தகவல்கள், ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. மார்ச் 22-ம் தேதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதற்கு பின்னால் காரணங்கள் இருப்பதாக சில...
பரவிய செய்தி
ஹாய் பிரதர்ஸ், நான் லதா மேடம் பேசுறேன், சன்டே 22-ம் தேதி இந்தியாவில் கொரோனா வைரசின் ஃபோர்த் வேவ்ஸ் நேரடியாக சூரிய ஒளி மூலம் வருகிறது. 144 சட்டம், வெளியே வராதீங்க அப்படித்தானே சொல்கிறார்களே தவிர, அது உண்மையான நிலவரத்தை சொல்லவில்லை. சன்டே மட்டும் சூரிய ஒளி உங்கள் உடலில் படாமல் பாத்துக் கொள்ளவும். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம். இது இத்தாலியிலும், சீனாவிலும் வந்து விட்டது.

[audio ogg="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2020/03/WhatsApp-Audio-2020-03-21-at-12.19.49-AM.ogg"][/audio]

விரிவான விளக்கம்
கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில், தேவையற்ற வாட்ஸ் அப் தகவல்கள், ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. மார்ச் 22-ம் தேதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதற்கு பின்னால் காரணங்கள் இருப்பதாக சில தவறான தகவல்கள் இந்திய அளவில் பரவியது.
மேலும் படிக்க : இந்தியாவில் ஊரடங்கு உத்தரவின் பின்னணி காரணம் உண்மையா ?
இந்நிலையில், லதா என்பவர் மார்ச் 22-ம் தேதி சூரிய ஒளியின் மூலம் கொரோனா வைரஸ் வருவதால் அன்று மட்டும் சூரிய ஒளி உடலில் படாமல் பாத்துக் கொள்ளவும் எனக் கூறும் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை வெளியே வர வேண்டாம் என வெளியான அறிவிப்பு ஏன் என்பதை முந்தைய கட்டுரையில் விவரித்து இருந்தோம். வைரஸ் பரவல் குறித்து குறைந்தபட்ச புரிதல் மக்கள் மத்தியில் தேவை. லதா மேடம் கூறிய தகவல் ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் இல்லை. அவர் கூறியது போன்று அன்றைய நாளில் சூரிய ஒளியின் மூலம் கொரோனா வைரசின் ஃபோர்த் வேவ்ஸ் வருவதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இது குறித்து மருத்துவர் பிரவீன் அவர்களின் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, " கொரோனா ஃபோர்த் வேவ்ஸ் என ஏதும் இல்லை. அதேபோல் சூரிய ஒளிக்கும் அதற்கும் தொடர்பில்லை. அனைவரும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மக்களின் மீது சூரிய ஒளிப்படுவதற்கும், வைரஸிற்கும் தொடர்பில்லை. நீங்கள் வெயில், பனி, பகல், இரவு என எங்கு இருந்தாலும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. லதா என்பவர் யார் எனத் தெரியவில்லை. அவர் இதுபோல் பேசாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது. மக்கள் வீடுகளில் இருப்பது நல்லது, ஆனால் அவர் கூறுவதில் உண்மை ஏதுமில்லை " எனத் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் உயராமல் இருக்கவே அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அதேபோல், உண்மையான தகவல்களை மட்டுமே பகிரவும், தேவையற்ற தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்.