
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X link | Archive link
விரிவான விளக்கம்
அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு கார்கள் வாங்குவதற்கும், விதவிதமாக டிக்கெட் போட்டு கல்லா கட்டுவதற்குமா அறநிலையத் துறை?? மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் கோபுரத்தின் அவலத்தை பாரீர் மக்களே!!! pic.twitter.com/naM6Jtr2vu
— K.A.R.Paranthaman B.A..LL.B (@KarParanthaman) September 12, 2023
Archive link
அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு கார்கள் வாங்குவதற்கும், விதவிதமாக டிக்கெட் போட்டு கல்லா கட்டுவதற்குமா அறநிலையத் துறை??
மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில் கோபுரத்தின் அவலம் ..!@annamalai_k@imkarjunsampath pic.twitter.com/Y1rhWQiLtg
— Fallssuruli (@Fallssuruli1) September 12, 2023
Archive link
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படம் குறித்து ஆய்வு செய்ததில் அது 2021ம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் பரவும் பழைய படம் என்பதும், தற்போது சுத்தமாக இருப்பதும் அறிய முடிந்தது.
2021, டிசம்பர் 1ம் தேதி தற்போது பரவக் கூடிய இதே படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு “மன்னார்குடியின் அடையாளமான ராஜகோபால சுவாமி திருக்கோயில் பராமரிப்பு இன்றி கிடக்கிறது! அதன் கோபுரம் முழுவதும் செடிகள் மண்டி கிடக்கின்றன.... வேர்கள் ஊடுருவி கோயிலை சிதைக்கின்றன! வெளி கோபுரம் மட்டுமல்ல, உள் பிரகாரம் முழுவதும் செடிகள் தான்” என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவரது டிவிட்டர் பக்கத்தில் “ஜூலை மாதத்தில் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பணிமுடிக்கபட்டு எடுக்கப்பட்ட புகைப்படம்” என பணியின்போதும் பணி முடிந்த பிறகும் எடுக்கப்பட்ட படத்தினை பதிவிட்டுள்ளார்.
நேற்று சிலர் பரப்பியிருக்கும் விஷமச் செய்திக்கு இதுவே கடைசி எச்சரிக்கை.இனி உண்மை நிலவரம் தெரியாமல் பொய்யான தகவல்களை பரிமாறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.ஜூலை மாதத்தில் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் பணிமுடிக்கபட்டு எடுக்கப்பட்ட புகைப்படம் #மன்னார்குடி #RajagopalaswamyTemple pic.twitter.com/M8Fl0KUN6u
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 3, 2021
மேலும் 2022, ஏப்ரல் மாதம் அக்கோயிலில் நடைபெற்ற பங்குனி திருவிழா குறித்து ‘தினமணி’யில் செய்தி வெளியாகியுள்ளது. அதில் உள்ள படத்தில் கோவில் கோபுரம் முறையாகச் சீரமைக்கப்பட்டு உள்ளது.
[caption id="attachment_47649" align="aligncenter" width="700"]
தினமணி, 2022 ஏப்ரல் 5[/caption]தற்போதைய நிலை குறித்து அறிய கூகுள் ஸ்ட்ரீட் வீயூ மூலம் தேடியதில் 2023, பிப்ரவரி மாதம் பதிவிட்டிருந்த படம் கிடைத்தது. அதில் கோவில் கோபுரத்தில் சில இடங்களில் செடிகள் வளந்திருப்பதைக் காண முடிகிறது.

இது குறித்து அக்கோவில் செயல் அலுவலர் மாதவனை யூடர்னில் இருந்து தொடர்பு கொண்டு பேசியபோது, “கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு தான் சுத்தம் செய்தோம். தற்போது கோபுரத்தில் செடிகள் எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி பரவக் கூடிய படம் மிகவும் பழையது. நாங்கள் அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டுதான் உள்ளோம்” எனக் கூறினார். மேலும் பணி செய்யும்போது எடுக்கப்பட்ட படங்களையும் பகிர்ந்தார்.

இவற்றில் இருந்து கோவில் கோபுரத்தில் செடிகள் வளர்ந்ததாக பரவும் படம் தற்போதையது கிடையாது என அறிய முடிகிறது. 2021 ஜூலை மாதமே அவை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இடையில் வளரும் சில செடிகளையும் அவ்வப்போது சுத்தம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகளின் தொகுப்பு !
இந்து சமய அறநிலையத்துறை பற்றிப் பரவிய பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகளைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : இந்து சமய அறநிலையத்துறை அவசியமா ? வரலாறும், அரசியலும் !
முடிவு :
நம் தேடலில், மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோவில் கோபுரம் சீரமைக்கப்படாமல் செடிகள் வளர்ந்துள்ளது எனப் பரவும் படம் 2021ம் ஆண்டு முதலே சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. 2021, ஜூலை மாதமே அவை சுத்தம் செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.