YouTurn

தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து மன்மோகன் சிங் கூறியதாக வதந்தி !

தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து மன்மோகன் சிங் கூறியதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

90 சதவீதம் இந்துக்கள் வாழும் தமிழகத்தில் பாஜகவால் ஒரு எம்பி சீட்டு கூட வெற்றி பெற முடியவில்லை காரணம்.. தமிழகத்தில் இருந்து படித்த இளைஞர்கள் நாசா, google, Microsoft போன்றவற்றிற்கு நிர்வாகியாக செல்கிறார்கள். அவர்கள் பாஜகவில் சேர்வதில்லை - டாக்டர் மன்மோகன்சிங்



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், தமிழகத்தில் வாழும் பெரும்பான்மையான இந்துக்கள் பாஜகவில் சேர்வதில்லை, மாறாக பெரு நிறுவனங்களின் நிர்வாகியாக செல்கிறார்கள் எனும் கருத்தைக் கூறியதாக சமூக வலைதளங்களில் தமிழில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.



உண்மை என்ன ? 

பகிரப்படும் பதிவுகளில் இடம்பெற்று இருப்பது போல் மன்மோகன்சிங் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிலை குறித்து பேசியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்கும் வெளியாகவில்லை. மாறாக, ட்விட்டர்வாசிகள் இப்பதிவை ஒத்தக் கருத்தினை பதிவிட்டு இருக்கிறார்கள்.



Twitter link | archive link

" 90% இந்துக்கள் இருக்கும் தமிழகத்தில் பாஜகவால் 1 எம்பி சீட்டு கூட பெற முடியவில்லை. அவர்களின் குழந்தைகள் நாசா, கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவற்றிற்கு செல்கிறார்கள், ஆர்.எஸ்.எஸ்-க்கு இல்லை " என ரக்சா ராமையா என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இதே கருத்தை மன்மோகன்சிங் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியதாக சர்ச்சை எழுந்தது, பின்னர் அது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அல்ல பக்கம் என செய்திகள் வெளியாகின.



2020 ஜூன் மாதத்தில் மன்மோகன்சிங் பெயரில் பரவிய போலியான ட்விட்டர் பக்கம் குறித்து தி பிரிண்ட் இணையதளத்தில் வெளியான செய்தியில், சர்ச்சையான ட்வீட்கள் வெளியான பிறகு மன்மோகன்சிங் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு போலியானது என சந்தேகம் எழுந்ததாக தற்போது வைரலான கருத்தைக் குறிப்பிட்டு உள்ளார்கள்.



மன்மோகன்சிங் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கு பின்னர் ரசிகர்கள்குழு என மாற்றப்பட்டது. பிரபலமானவர்களின் பெயரில் ரசிகர்கள், நையாண்டி பக்கங்கள் தொடங்குவது வழக்கமான ஒன்று என ஏஎல்டி இணையதளத்தின் நிறுவனர் ப்ரதிக் சின்ஹா ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.



Twitter link | archive link

மன்மோகன்சிங் பெயரிலும் பல போலியான ட்விட்டர் பக்கங்கள் இயங்கி வருகிறது. அவற்றில் வெளியாகும் பதிவுகளை உண்மை என நினைத்து பகிர்ந்து விடுகிறார்கள். தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்து மன்மோகன்சிங் தெரிவித்ததாக வெளியானதும் போலியான ட்விட்டர் பக்கத்தில்தான் தவிர அவருடைய கருத்து அல்ல.

முடிவு : 

நம் தேடலில், 90 சதவீதம் இந்துக்கள் வாழும் தமிழகத்தில் பாஜகவால் ஒரு எம்பி சீட்டு கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் தமிழகத்தில் இருந்து படித்த இளைஞர்கள் நாசா, கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவற்றிற்கு நிர்வாகியாக செல்கிறார்கள் மற்றும் அவர்கள் பாஜகவில் சேர்வதில்லை எனும் கருத்தினை டாக்டர் மன்மோகன்சிங் கூறவில்லை என்பதையும், அவர் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் பக்கத்தில் வெளியானது என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க