யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொது மக்கள் 13 பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். தற்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி பேசும் நாம் 1999-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை...
பரவிய செய்தி
1999 ஆம் ஆண்டில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் 19 பேரை சுட்டுக் கொன்ற திமுக அரசு. நமக்கு மறதி அதிகம்.
விரிவான விளக்கம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பொது மக்கள் 13 பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். தற்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி பேசும் நாம் 1999-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 19 பேரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தை இங்குள்ள மக்கள் மறந்து விட்டனர் என்றுக் கூறி ஒரு பதிவு ஃபேஸ்புக் பக்கத்தில் பரவி வருகிறது.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை :
மாஞ்சோலை தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மணிமுத்தாறு அணைக்கு மேலே “ பம்பாய் பர்மா ட்ரேடிங் கார்பரேஷன் “ என்ற நிறுவனத்திற்கு 110 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட 8.374 ஏக்கர் நிலப்பரவு ஆகும். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் மக்களுக்காக பல தொழிலாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வந்தன.

அங்கு இருந்த தொழிலாளர்களுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை தினக்கூலி. நாள் ஒன்றிற்கு வழங்கப்படும் ரூ.53-ஐ வைத்துக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. இவர்களின் பிரச்சனை 1998 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதே வெளிவர ஆரம்பித்தது. அதுவே தொடக்கம். இந்நிலையில், தான் 1999 ஆம் ஆண்டில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றுக் கூட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டனர். அதில் கலந்துக் கொண்ட தொழிலாளர்களையும், அதற்கு அடுத்த நாள் கைதாகிய தங்களின் கணவன்மார்களை விடுவிக்கக் கோரி போராடிய 600-க்கும் மேற்ப்பட்டவர்களை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கைதுக்கு பின்னர் 1999-ல் ஜூலை 23-ல் தினக்கூலியை 53-ல் இருந்து 150ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை சற்று தளர்ந்து கைதானவர்களை விடுவிக்க வேண்டும் என்று தொழிலாளர்களுடன், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் ஊர்வலமாய் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் ஐக்கிய ஜமாத், தமிழ் மாநில காங்கிரஸ், எதிர்க் கட்சி தலைவர் என பலரும் பங்கு பெற்றனர்.

பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்து முடிவு எடுக்கும் முன்பே கலவரம் மூண்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் குண்டுகள் வீசியும் மக்கள் கூட்டத்தைக் கலைக்க போலீசார் முயற்சித்தனர். இதனால் மக்கள் அருகில் இருந்த தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடத் துவங்கினர். அது அவர்களுக்கு விபரீதமாக அமைந்தது. " கைகளில் சவுக்கு கம்புகளை கொண்டு தண்ணீரில் இருந்து வெளியே வருபவர்களை கண்மூடித்தனமாக போலீஸ் தாக்கினர். இருபுறமும் போலீஸ் தாக்கியதால் மக்கள் தண்ணீரில் மோதிக் கொண்டதில் 2 வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது" . மேலும், தடியடி நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் பெண்கள்,1 குழந்தை உள்பட மொத்தம் 17 பேர் இறந்தனர். குறைந்தபட்ச ஊதியம் வேண்டி போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இறுதியில் வலிகள் மட்டுமே கிடைத்தன. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் சார்பில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையிலான விசாரணை குழு அறிக்கையில், " ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் முறையற்ற நடத்தை, அரசு மற்றும் காவலர் மீதும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி முழக்கங்கள் எழுப்பியதே இதற்கு காரணம். இருப்பினும், நடந்த போலீஸ் அத்துமீறலுக்காக அதிகாரிகளை விருப்ப ஓய்வு பெற வேண்டும் ” என்று கூறியிருந்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படை உரிமையைப் பெற போராடும் பொழுது எல்லாம் பல உயிர் பலி கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ம் தேதி நெல்லையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை 17 பேரை போலீசார் சுட்டுக் கொல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் நடத்திய தடியடியே அவர்களின் இறப்பிற்கு காரணமாகியுள்ளது.

சுருக்கமாக
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியும், ஆற்றில் தள்ளி தாக்கியதிலும் 17 பேர் பரிதாபமாக இறந்தனர்.