யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிஜேபி எம்எல்ஏ அங்குள்ள பகுதியில் மேம்பாலம் கட்டித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற பொழுது அவரை மக்கள் ஓட ஓட விரட்டி எடுத்ததாக ஒரு வீடியோ முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது. Facebook link | Archived link ஜெயராமன் திமுக என்பவரின்...
பரவிய செய்தி
மணிப்பூர் பிஜேபி எம்எல்ஏ மேம்பாலம் கட்டி தருகிறேன் என்று கூறி மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்கு கேட்டு வந்த பிஜேபி எம்எல்ஏவை ஓட ஓட விரட்டி அடிக்கும் பொது மக்கள்..

விரிவான விளக்கம்
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிஜேபி எம்எல்ஏ அங்குள்ள பகுதியில் மேம்பாலம் கட்டித் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு சென்ற பொழுது அவரை மக்கள் ஓட ஓட விரட்டி எடுத்ததாக ஒரு வீடியோ முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது.
Facebook link | Archived link
ஜெயராமன் திமுக என்பவரின் முகநூல் கணக்கில் பதிவிடப்பட்ட வீடியோ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று உள்ளது. இதையடுத்து, பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் என்பதை பார்க்க முடிந்தது.

வீடியோவில் இருப்பவர்களை பார்க்கையில், கழிவுநீர் கால்வாயில் தள்ளிவிடப்படும் நபர் பாஜக எம்எல்ஏ போன்றோ, சுற்றி இருக்கும் மக்கள் இங்குள்ளவர்கள் போன்றே தெரியவில்லை. ஆனாலும், அரசியல் சார்ந்து தெரிந்தே அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதனை கம்மெண்ட்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
வீடியோ எங்கு எடுக்கப்பட்டது ?
வீடியோ குறித்து தேடிய பொழுது, 2019 செப்டம்பர் 17-ம் தேதி " Agencia MANL " என்ற யூட்யூப் தளத்தில் பிற நாட்டு மொழியில் வைரல் வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள தலைப்பை மொழிமாற்றம் செய்து பார்க்கையில், " Is the mayor of Ecatepec thrown into a sewage canal " எனக் குறிப்பிட்டு இருக்கிறது.
Ecatepec என்பது மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு நகரம். மேலும், வீடியோ குறித்த தேடலில், வீடியோவில் " PortalEngomadeira " என்ற லோகோ இருந்தது. அதை வைத்து தேடிய பொழுது Portal Engomadeira -வின் முகநூல் பக்கத்தில் 5 மாதங்களுக்கு முன்பு அதே வீடியோவின் முழு நீள காட்சியும் இடம்பெற்று இருக்கிறது.

அந்த வீடியோவில் அரசியல்வாதி ஒருவரை மக்கள் கழிவுநீர் வாய்க்காலில் தள்ளி விரட்டி அடித்ததாக பரவி இருந்தது. ஆனால், உண்மையில் பிரேசில் நாட்டில் உள்ள பாஹியா மாகாணத்தில் இருக்கும் Engomadeira பகுதி மக்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோவே அவை. வீடியோவை இங்கே காண்க
சமூகத்தில் இருக்கும் அரசியல் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க அவ்வாறான வீடியோவை எடுத்துள்ளனர். PortalEngomadeira முகநூலில் வெளியான உண்மையான வீடியோவின் இறுதி காட்சிகளில், கால்வாயில் தள்ளி விடப்பட்ட நபரே பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரங்களில் இருந்து, மேம்பாலம் கட்டாமல் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாக்கு கேட்டு வந்த பிஜேபி எம்எல்ஏவை பொது மக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சிகள் என பரவும் வீடியோ தவறானவை.
பிரேசில் நாட்டில் அரசியல்வாதிகள் குறித்து எடுக்கப்பட்ட சித்தரிப்பு வீடியோவை சில நாடுகளில் உண்மை என பரவி இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.