YouTurn

மணிப்பூரில் 52 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக.. அண்ணாமலையின் அடுத்த பொய் !

மணிப்பூரில் 52 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக.. அண்ணாமலையின் அடுத்த பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மணிப்பூரில் 52 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். 2013ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவின் வாக்கு 0.5 சதவீதம். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு 52 சதவீதம். - தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சி மருத்துவ பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் முழு வீடியோ  Kolahalas TV என்ற youtubeல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் மணிப்பூரில் பாஜகவின் வாக்கு சதவீதத்தினை பற்றி சில தரவுகளை குறிப்பிடுகிறார்

https://twitter.com/BJP4TamilNadu/status/1590305156897218560

அவர் பேசியது: பாஜகவைச் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்கிறார்கள். மணிப்பூரில் 52 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அது ஒரு கிறிஸ்தவ மாநிலம். அங்கு 2013ல் 0.5 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம், 9 வருடத்தில் 52 சதவீதமாகியுள்ளது எனப் பேசியுள்ளார். 

மேலும், பத்திரிகையாளர் ராணா அய்யூப் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போதுதான் விடுதலையாகி உள்ளதாக அண்ணாமலை குறிப்பிடுகிறார். 

உண்மை என்ன ?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மணிப்பூர் பற்றியும், அங்கு பாஜக பெற்ற வாக்கு சதவீதம் பற்றியும் பேசியது குறித்து இணையத்தில் தேடினோம். 



2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சம எண்ணிக்கையிலேயே உள்ளனர். அப்புள்ளி விவரத்தின் படி, இந்துக்கள் - 41.39 சதவீதமும், கிறிஸ்தவர்கள் - 41.29 சதவீதமும் உள்ளனர். மீதமுள்ள 17.32 சதவீதம் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என பல்வேறு மதத்தினர் உள்ளனர்.

இத்தரவிலிருந்து மணிப்பூரில் 52 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் என அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது தவறானது என்பதை அறிய முடிகிறது.

[caption id="attachment_36333" align="aligncenter" width="1074"] 2022 மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்[/caption]

மணிப்பூரில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அங்கு 2022ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக 32 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

2022  தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாஜக 37.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல 2012ல் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜக 2.12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 

[caption id="attachment_36334" align="aligncenter" width="1232"] 2012 மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்[/caption]

ஆனால், அண்ணாமலை 2013ல் 0.5 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 9 வருடங்களுக்குப் பிறகு 52 சதவீதம் வாக்குகளைப் பெற்றதாகத் தவறான தகவலினை பேசியுள்ளார்.

மேலும், 2002 கால கட்டத்தில் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அப்போது குஜராத்தில் நடைபெற்ற கலவரம் பற்றி “குஜராத் கோப்புகள்” என்ற புத்தகத்தை ராணா அய்யூப் எழுதியுள்ளார். 

ராணா அய்யூப், கொரோனா காலத்தில் குடிசை பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்காக Ketto இணையதளத்தின் மூலமாக நிதி திரட்டினார். அதில் ரூ.2.69 கோடி வசூலானது. அப்பணத்தினை அவர் வசூல் செய்த காரணத்திற்காக பயன்படுத்தாமல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 



அவர் மீது வழக்குப் பதிவு செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகளும் வெளியாகி உள்ளது. ஆனால், அவர் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உள்ளதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. 

மேலும் படிக்க : கோவை கார் வெடிப்பு வழக்குப் பதிவு பற்றி அண்ணாமலை சொன்ன பொய் !

மேலும் படிக்க : உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு


இதற்கு முன்னதாக அண்ணாமலை கோவை கார் வெடிப்பில் NIA வழக்கு பதிவு செய்தது தொடர்பாகவும், தமிழ் நாடு உளவுத்துறையில் உயர் பதவிகளில் அதிகப்படியாக கிறிஸ்தவ மதத்தினை சார்தவர்கள் உள்ளனர் என பொய்யான தகவல்களை பேசி இருந்தார். அவை குறித்து யூ டர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், 2022ல் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 52 சதவீதம் வாக்கு பெற்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது உண்மையல்ல. 2022 மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக  37.8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க