YouTurn

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் உலா வருவதாக பரவும் இமாச்சல பிரதேச வீடியோ!

பரவிய செய்தி

தாயுடன் தொட்டபெட்டா சாலையை கடந்த 4 குட்டி புலிகள்: வைரல் வீடியோ


x


X Link

விரிவான விளக்கம்

தொட்டபெட்டா சாலையில் தனது தாயுடன் நான்கு குட்டிப்புலிகள் உலா வருவதாக சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ ஒன்று பரவி வருகின்றது.


https://x.com/i/web/status/1845378956603560057



உண்மை என்ன?


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் இந்த வீடியோ தொட்டபெட்டாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறியமுடிந்தது. 


இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள பரோட் சாலையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை அதிகாரி சிவம் ரத்னா மற்றும் அவரது குழுவினர் ஒரு பெண் சிறுத்தை மற்றும் அதன் நான்கு குட்டிகளுடன் சாலையை  கடந்து செல்வதை பார்த்து தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளதாக பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு ZeeNews இணையதளப்பக்கத்தில் செப்டம்பர் 7, 2024 செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை பார்க்க முடிந்தது.


image.png


இதே தகவலைத்தான் monalexpress என்ற இணையதளப்பக்கத்திலும் செப்டம்பர் 30, 2024 பதிவு செய்திருப்பதை கவனிக்க முடிந்தது.


image.png


மேற்கொண்டு தேடியதில், Bhaskar என்ற இந்தி இணையதளப்பக்கத்தில் "மண்டியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் பெண் சிறுத்தை" என்ற தலைப்பில் வீடியோவுடன் செய்தி வெளியிட்டிருப்பதை அறியமுடிந்தது. 


மேற்கண்ட ஆதாரங்களை வைத்து பார்க்கையில் இவை ஊட்டி தொட்டபெட்டாவில் நடந்தது அல்ல என்பது தெளிவாகிறது.


 முடிவு :


நம் தேடலில், ஊட்டி தொட்டபெட்டா சாலையில் சிறுத்தைகள் நடமாடுவதாக பரவும் தகவல் தவறானது.  உண்மையில் இவை இமாச்சல் பிரதேசம் பரோட் சாலையில் சிறுத்தைகள் நடமாடிய கட்சிகள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க